பொன்னியின் செல்வனுக்காக ஜெயம் ரவி செய்த காரியம்...மிரண்டு போன டீம்

சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது பொன்னியின் செல்வன். கிட்டதட்ட 500 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை லைகா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருப்பவர்களின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் டீசர் ஜுலை 8 ம் தேதி வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சாதனை படைத்த பொன்னியின் செல்வன்

சாதனை படைத்த பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் டீசர் யூட்யூப்பில் இதுவரை 25 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று, சாதனை படைத்துள்ளது. இந்த டீசர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது. அடுத்தபடியாக டிரைலர் எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், பொன்னியின் செல்வன் படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சர்சையான அருள்மொழி வர்மன்

சர்சையான அருள்மொழி வர்மன்

இந்த படத்தில் அருள்மொழி வர்மன் எனப்படும் ராஜராஜ சோழன் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இவரின் கேரக்டர் போஸ்டரில் அருள்மொழி வர்மன் என்பதற்கு பதிலாக அருண்மொழி வர்மன் என தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் விவாதப் பொருளானது. இந்த சர்ச்சை தற்போது வரை ஓயவில்லை.

இவ்வளவு விஷயம் செய்திருக்கிறாரா

இவ்வளவு விஷயம் செய்திருக்கிறாரா

இது ஒரு புறம் போய் கொண்டிருக்கையில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்திற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவில்லையாம். தான் நடித்துக் கொண்டிருந்த படங்களின் வேலைகளை பாதியிலேயே நிறுத்தி விட்டாராம்.

அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்

அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்

முழுக்க முழுக்க 2 வருடங்களை பொன்னியின் செல்வன் படத்திற்காக செலவிட்ட ஜெயம் ரவி, தனி ஒருவன் 2 படத்தின் வேலைகளை பிறகு பார்த்குக் கொள்ளலாம் என ஒத்திவைத்து விட்டாராம். பூமி படத்தின் தோல்விக்கு பிறகு பல விதமான விமர்சனங்களை ஜெயம் ரவி சந்தித்தார். இருந்தாலும் அந்த விமர்சனங்களை மாற்ற உடனடியாக மற்றொரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என நினைக்காமல் பொன்னியின் செல்வன் படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி உள்ளார்.

இனி ஜெயம் ரவி இமேஜே மாறிடும்

இனி ஜெயம் ரவி இமேஜே மாறிடும்

அதோடு தான் நடிக்கும் பெரிய பட்ஜெட் படமான, அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜன கன மன படத்தின் வேலைகளையும் நிறுத்தி விட்டாராம். பொன்னியின் செல்வன் படத்தின் வேலைகளை முழுவதுமாக முடித்த பிறகே அகிலன் படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இதனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் நடிப்பும், இமேஜும் நிச்சயம் வேற லெவலுக்கு போகும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Chiyaan Vikram | தீயாய் பரவும் தகவல்... ஆர்வத்தில் ரசிகர்கள் *Kollywood
மிரண்டு போன படக்குழு

மிரண்டு போன படக்குழு

பொன்னியின் செல்வன் ஒரு படத்திற்காக தான் கமிட்டான அத்தனை படங்களையும் ஜெயம் ரவி ஒதுக்கி வைத்து விட்டு, முழு முயற்சியையும், உழைப்பையும் பொன்னியின் செல்வன் படத்திற்காக அளித்ததை பார்த்து பொன்னியின் செல்வன் படக்குழுவே அசந்து போய் விட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X