Don't Miss!
- Education
NAAN MUDHALVAN SHORT FILM FESTIVAL 2023:குறும்பட திருவிழா போட்டியில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்...!
- News
தூய்மை பணியாளர்களுக்கு விருந்து! எல்லோருக்கும் பிரியாணி பரிமாறிவிட்டு ரசம் ஊற்றி சாப்பிட்ட ஆ.ராசா!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
காத்திருந்தும் பலனில்லை... சங்கமித்ராவில் இருந்து விலகும் பொன்னியின் செல்வன்... படக்குழு அப்செட்
சென்னை: கமர்சியல் திரைப்படங்கள் மூலம் பிரபலமான சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ராஜமெளலி இயக்கிய பாகுபலியின் வெற்றியை பார்த்த சுந்தர் சி, மெகா பட்ஜெட்டில் சங்கமித்ரா என்ற ஹிஸ்டாரிக்கல் படத்தை இயக்க திட்டமிட்டார்.
ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், இசைக்கு ஏஆர் ரஹ்மான் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் தொடங்கிய இந்தப் படத்தை 300 கோடி பட்ஜெட்டில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது.
ஆனால் சங்கமித்ரா குறித்த பிரம்மாண்டமான அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில், 4 ஆண்டுகளாகியும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
சங்கமித்ரா
சரிபட்டு
வரல..
மீண்டும்
கலை
அலங்காரத்தை
கூப்பிட்டு
அரண்மனை
4
செட்
போட
வேண்டியது
தான்!

மினிமம் கியாரண்டி டைரக்டர்
கோலிவுட்டில் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்ற பெயர் எடுத்தவர் சுந்தர் சி. 1995ல் முறை மாமன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுந்தர் சி, அடுத்தடுத்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, ரஜினியின் அருணாசலம், அஜித்தின் உன்னைத் தேடி போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக மாஸ் காட்டினார். சின்ன பட்ஜெட்டில் மினிமம் கியாரண்டி படங்களை கொடுப்பதில் வல்லவரான சுந்தர் சி, ராஜமெளலி இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த பாகுபலியை பார்த்து கனவில் கோட்டை கட்டினார்.

300 கோடியில் சங்கமித்ரா
'தலைநகரம்' படம் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்த சுந்தர் சி, கடைசியாக 'காஃபி வித் காதல்' படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்தாண்டு நவம்பர் 4ம் தேதி வெளியானது. பாகுபலி போல பிரம்மாண்டமான படம் இயக்க முடிவு எடுத்த சுந்தர் சி, சங்கமித்ரா ப்ராஜக்ட்டை தொடங்கினார். தேனான்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆனார். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்னும் தொடங்காத ஷூட்டிங்
விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் வாள் சண்டை பயிற்சிகளிலும் ஈடுபட்டனர். ஆனால் நாட்கள் கடந்துகொண்டே இருந்ததால் முதல் ஆளாக ஸ்ருதி ஹாசன் சங்கமித்ராவில் இருந்து விடை பெற்றார். ஆனாலும் சங்கமித்ரா கண்டிப்பாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஜெயம் ரவியும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்செட்டான படக்குழு
சங்கமித்ராவின் தயாரிப்பு உரிமையை தேனாண்டாள் ஃபிலிம்ஸிடம் இருந்து லைகா வாங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் சுந்தர் சி இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தை தான் லைகா தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் ஜெயம் ரவியும் சங்கமித்ராவில் இருந்து விலகியதாக தெரிகிறது. இப்படி அடுத்தடுத்து வரும் தகவல்களால் சங்கமித்ராவில் கமிட்டான மற்ற நடிகர்கள் குழப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவி விளக்கம்
இதனையடுத்து தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் ஜெயம் ரவி. தனி ஒருவர்ன் 2 படத்துக்கான கதை ரெடியாக தான் இருக்கிறது. கதை சிறப்பாக வந்துவிட்டாலும் பொன்னியின் செல்வன் படத்தில் கமிட் ஆகியிருந்ததால் கொஞ்சம் தாமதமாகிவிட்டதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். இதனால் விரைவில் தனி ஒருவன் 2 படப்பிடிப்பில் ஜெயம் ரவி கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. ஜெயம் ரவி நடிப்பில் அகிலன், இறைவன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய திரைப்படங்கள் இந்தாண்டில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.