ராஜராஜ சோழனாக நடிக்க மணிரத்னம் சொன்ன அறிவுரை, நடிகர்களுக்குள் போட்டி: மனம் திறந்த ஜெயம் ரவி

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

ராஜராஜ சோழனாக அருள்மொழி வர்மன் என்ற முக்கியமான கேரக்டரில் ஜெயம் ரவி நடித்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஜெயம் ரவி மனம் திறந்து பேசியுள்ளார்.

எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன்

எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முதல் பாகம் வரும் 30ம் தேதி பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக ஜெயம் ரவி ராஜராஜ சோழனாக அருள்மொழி வர்மன் கேரக்டரில் நடித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் முதன்முறையாக

மணிரத்னம் இயக்கத்தில் முதன்முறையாக

ஜெயம் ரவி கேரியரில் பொன்னியின் செல்வன் படம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை மணிரத்னம் இயக்கத்தில் நடித்திடாத ஜெயம் ரவி, முதன்முறையாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். அதுவும் ராஜராஜ சோழனாக அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் படத்தில் முதன்முறையாக நடித்துள்ளது குறித்து நிரூபர்களிடம் பதிலளித்த ஜெயம் ரவி, "மற்ற இயக்குநர்களின் படங்களில் வசனங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். மணிரத்னம் படத்தில் வசனத்தை விட உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும்" என்றார்.

ஷூட்டிங்கில் நடிகர்களுக்குள் போட்டி இருந்தது

ஷூட்டிங்கில் நடிகர்களுக்குள் போட்டி இருந்தது

நேற்று நடந்த பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜெயம் ரவி, தொடர்ந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பொன்னியின் செல்வன் சூட்டிங் ஸ்பாட்டில், நடிகர்களுக்கு இடையே போட்டியிருந்தாகக் கூறியுள்ளார். "பிரபு சாருடன் ஏற்கனவே நடித்துள்ளதால், நான் எதாவது தவறு செய்தால் சுட்டிக்காட்டுவார். பொன்னியின் செல்வனில் நடித்த நடிகர்களிடம் போட்டி இருந்தது உண்மை தான். ஆனால், அது ஆரோக்கியமான போட்டி தான்" எனக் கூறினார்.

மணிரத்னம் சொன்ன அறிவுரை இதுதான்

மணிரத்னம் சொன்ன அறிவுரை இதுதான்

ராஜராஜ சோழனாக நடிக்க இயக்குநர் மணிரத்னம் சொன்ன அறிவுரை என்ன என்று நிரூபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்துள்ள ஜெயம் ரவி, "படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு போன பிறகும் ராஜராஜ சோழனை மறந்து விடாதே. உன் நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலும் ராஜராஜ சோழன் இருக்க வேண்டும்" எனக் கூறினார். மேலும், ஏற்கனவே ராஜராஜ சோழனாக சிவாஜி கணேசன் நடித்துள்ள நிலையில், அந்த பாத்திரத்தில் நடித்திருப்பது பற்றி ஜெயம் ரவியிடம் கேட்கப்பட்டது. அதற்கு "நடிகர் திலகம் உலக நடிகர். அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம்" என பவ்யமாக பதிலளித்துள்ளார் ஜெயம் ரவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X