»   »  வனமகன் ஹிட்டாகாவிட்டால் விஜய்க்கு ஒரு படம் ஃப்ரீயா பண்றேன்: ஜெயம் ரவி

வனமகன் ஹிட்டாகாவிட்டால் விஜய்க்கு ஒரு படம் ஃப்ரீயா பண்றேன்: ஜெயம் ரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வனமகன் படம் நிச்சயம் லாபத்தை கொடுக்கும். இல்லாவிட்டால் நான் சம்பளமே வாங்காமல் விஜய்க்கு ஒரு படம் பண்ணிக் கொடுப்பேன் என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சயீஷா சைகல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வனமகன். இந்த படம் மூலம் சயீஷா கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

வனமகன் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

வனமகன் படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட ரவி சொன்ன ஒரு விஷயம் அனைவரையும் கவர்ந்தது.

வனமகன்

வனமகன்

வனமகன் படத்திற்காக போட்ட பணம் நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படி போட்ட பணம் வசூலாகாவிட்டால் நான் சம்பளம் வாங்காமல் விஜய்யின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கிறேன் என்றார் ரவி.

விஜய்

விஜய்

சினிமாவை காதலிக்கும் ஏ.எல். விஜய் போன்ற ஒருவரால் தான் வனமகன் போன்ற படத்தை இயக்க முடியும். கூட்டுக் குடும்பமாக வசிக்கும் பழங்குடியினத்தவர்களை பற்றிய படமே வனமகன். தமிழனாக இருந்தால் தயவு செய்து இந்த படத்தை இன்டர்நெட்டில் அப்லோடு செய்யாதீர்கள் என்று ரவி கேட்டுக் கொண்டார்.

சயீஷா

சயீஷா

வனமகன் ரிலீஸுக்கு முன்பே கோலிவுட்டின் இளம் ஹீரோக்கள் மத்தியில் சயீஷா பிரபலமாகிவிட்டார். அடுத்ததாக அவர் விஷால்-கார்த்தியின் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடிக்கிறார்.

English summary
Jayam Ravi is so confident that his upcoming movie Vanamagan will be a hit. If it doesn't get the money invested, he is ready to act in one more movie for Vijay for free.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil