»   »  ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது மிருதன் குழு!

ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது மிருதன் குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிருதன் படத்தின் வெற்றி, அந்தக் குழுவை மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைத்திருக்கிறது.

ஆம், அந்தப் படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஜெயம் ரவி சம்மதித்துள்ளார். இந்தப் படத்துக்கான கதையை ஒரே நாளில் முடிவு செய்துவிட்டாராம் ஜெயம் ரவி.

ஜெயம் ரவி - லட்சுமி மேனன் நடிப்பில் தயாரான மிருதன் படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. தமிழில் தயாரான ரத்தக்காட்டேரி வகைப் படம் இது என்பதால் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.

Jayam Ravi to join hands with Miruthan crew again

இந்த வரவேற்பைப் பார்த்த அந்தப் படக்குழு மீ்ண்டும் ஒரு புதிய படத்துக்காக இணைகிறது.

இந்தப் புதிய படத்துக்கான கதையைக் கேட்ட ஜெயம் ரவி, ஒரே நாளில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இந்த முறையும் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய கதையுடன் களமிறங்கப் போகிறார்களாம்.

‘மிருதன்' படத்தில் நடித்த ஜெயம் ரவி இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். சக்தி சௌந்தரராஜன் இயக்கவிருக்கிறார். கதாநாயகி தேடுதல் படலம் நடக்கிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.

English summary
Miruthan crew has decided to join again with Jayam Ravi for a new movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil