மணிரத்னம் பண்ண வேலையை பார்த்து ராஜமெளலியே ஷாக் ஆகிட்டாரு.. ஜெயம் ரவி சொன்ன சூப்பர் விஷயம்!

சென்னை: பொன்னியின் செல்வன் தியேட்டர் டிக்கெட் புக்கிங் அனல் பறந்து கொண்டு இருக்கிறது.

வெள்ளி, சனி, ஞாயிறு என மொத்தம் 3 நாட்களுக்கான மல்டி பிளக்சஸ் டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்து வருகின்றன.

இந்நிலையில், ஜெயம் ரவி பேசிய ராஜமெளலியே ஷாக் ஆன பொன்னியின் செல்வன் மேட்டர் ஒன்று மேலும், தமிழ் சினிமா ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்துள்ளது.

பிரம்மாண்ட மேக்கிங் என்றாலே

பிரம்மாண்ட மேக்கிங் என்றாலே

இந்திய சினிமாவில் இப்போதைக்கு பிரம்மாண்ட சினிமா மேக்கிங் என்றாலே இயக்குநர் ராஜமெளலியின் பெயர் தான் எந்த ஸ்டேட்டுக்கு போனாலும் ரசிகர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களை அவர் கொடுத்துள்ளார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்னம் எடுத்த வேகத்தை அறிந்து அவரே ஷாக் ஆகி உள்ளார்.

டிரெண்டாகும் ஜெயம் ரவி

டிரெண்டாகும் ஜெயம் ரவி

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. தஞ்சை பெரிய கோயிலை ராஜ ராஜ சோழன் எப்படி கட்டினார், அவரது ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து சியான் விக்ரம் பேசியது டிரெண்டான நிலையில், அதனை தொடர்ந்து அருள்மொழி வர்மன் ஜெயம் ரவியின் பேச்சு டிரெண்டாகி வருகிறது.

150 நாட்கள்

150 நாட்கள்

பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகம் என மொத்தத்தையும் இயக்குநர் மணிரத்னம் வெறும் 150 நாட்களில் அதாவது 5 மாதங்களுக்குள் எடுத்து முடித்துள்ளார். இந்த தகவலை முதல் முறையாக கார்த்தி முதல் பாடலான பொன்னி நதி பாடல் வெளியீட்டின் போதே சொல்லி ரசிகர்களையும் சினிமா கலைஞர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

ஷாக்கான ராஜமெளலி

ஷாக்கான ராஜமெளலி

இந்நிலையில், இதே விஷயத்தை இயக்குநர் ராஜமெளலியிடம் ஜெயம் ரவி சொன்ன போது, ஒரு நிமிஷம் சேரில் இருந்து எழுந்து வந்த ராஜமெளலி, என்ன சொல்றீங்க ரவி எனக்கு பாகுபலி 1 மற்றும் 2 எடுத்து முடிக்க 5 ஆண்டுகள் ஆனது என்று வியப்பாக கூறினார்.

மாஸ்டர் பிரைன்

மாஸ்டர் பிரைன்

மேலும், இயக்குநர் மணிரத்னம் அதை எப்படி சாத்தியப்படுத்தினார் என்பதையும் ஜெயம் ரவியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் என ஜெயம் ரவி பெருமையாக பேசி உள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. சாதாரண படங்களையே பல ஆண்டுகள் சில இயக்குநர்கள் எடுத்து வரும் நிலையில், மணிரத்னம் இதை எப்படி சாத்தியப்படுத்தினார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ட்ரோல் ஆகுது

ட்ரோல் ஆகுது


ஜெயம் ரவி பேசிய இந்த பேச்சு ஒரு பக்கம் ரசிகர்களை வியக்க வைத்தாலும், டோலிவுட் ரசிகர்கள் இதனை ட்ரோல் செய்து வருகின்றனர். ராஜமெளலி போல மேக்கிங்கிற்காக மணிரத்னம் எந்தவொரு உழைப்பையும் போடவில்லை. படம் வந்தாலும், அதன் மேக்கிங் எப்படி இருக்கப் போகுது எத்தனை ஓட்டைகள் உள்ளன என்பது தெரிந்து விடும் என்று கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X