twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேட்காமலேயே எல்லாம் கிடைத்தது..சந்தோஷ் சுப்ரமணியம் பிரகாஷ்ராஜ் கேரக்டர்தான் எங்க அப்பா..ஜெயம் ரவி

    |

    சென்னை : நடிகர் ஜெயம் ரவி சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

    தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கேரக்டரில் நடித்து முடித்துள்ளார்.

    இதையடுத்து அவரது அகிலன், இறைவன் படங்களும் அடுத்தடுத்த ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

    விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளது...உண்மையை ஓப்பனாக சொன்ன பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளது...உண்மையை ஓப்பனாக சொன்ன பிரேமலதா

    நடிகர் ஜெயம் ரவி

    நடிகர் ஜெயம் ரவி

    நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் எப்போதுமே தயாரிப்பாளர்களை ஏமாற்றாத படங்களாகவே அமைந்து வருகின்றன. இவரது நடிப்பில் கடைசியாக கோமாளி படம் வெளியான நிலையில், தற்போது அடுத்தடுத்த 3 படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன.

    அருண்மொழி வர்மன் கேரக்டர்

    அருண்மொழி வர்மன் கேரக்டர்

    மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கேரக்டரில் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அகிலன், இறைவன் ஆகியப் படங்களும் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

    தனி ஒருவன் படம்

    தனி ஒருவன் படம்

    இந்தப் படங்களை அடுத்து தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2015ல் வெளியானது. நயன்தாரா இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிறப்பான கதைக்களத்துடன் வெளியான இந்தப்படம் சிறப்பான வசூலை பெற்றுத்தந்தது.

    பிரகாஷ்ராஜ் கேரக்டர்

    பிரகாஷ்ராஜ் கேரக்டர்

    இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி அளித்துள்ள பேட்டியொன்றில் தன்னுடைய அப்பா குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் போன்றவர் தன்னுடைய அப்பா என்றும் தான் கேட்காமலேயே தனக்கு எல்லாம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    அப்பாவிடம் பயமில்லை

    அப்பாவிடம் பயமில்லை

    ஆனால் அந்தப் படத்தில் வரும் சந்தோஷ் போன்று தான் அப்பாவிற்கு பயப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்பாவிடம் மரியாதை எப்போதும் உண்டு என்றும் ஆனால் பயம் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படம் முன்னதாக கடந்த 2006ல் பொம்மரில்லு என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது.

    Recommended Video

    Radha Ravi | இன்னும் 2 வருடத்தில் சினிமாவில் நடிக்கமாட்டேன் | Kanal | *Kollywood
    பொம்மரில்லு குறித்து ஜெயம் ரவி

    பொம்மரில்லு குறித்து ஜெயம் ரவி

    இந்தப் படத்தை ஜெயம் ரவியின் நண்பர் பாஸ்கர்தான் இயக்கியிருந்தார். தங்களுக்கு தெரியாமலேயே தன்னுடைய அப்பா கேரக்டரை அவர் பயன்படுத்தியிருந்ததையும் ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார். ஆனால் க்ளைமாக்சில் சிறப்பான காட்சிகளை அவர் அமைத்திருந்தது தங்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

    English summary
    Jayam ravi hails his father and says that he is like Santhosh Subramaniam Prakash raj character
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X