»   »  ஜெயம் ரவியின் பூலோகம் டிரெய்லர் வெளியானது... படம் 24 முதல்

ஜெயம் ரவியின் பூலோகம் டிரெய்லர் வெளியானது... படம் 24 முதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான பூலோகம் திரைப்படத்தின் டிரெய்லர் சற்று முன்னர் வெளியானது. படம் வருகின்ற 24 ம் தேதி வெளியாகிறது.

ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், பொன்வண்ணன் மற்றும் பலரின் நடிப்பில் உருவான பூலோகம் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார்.


ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டங்களால் இப்படத்தை நீண்ட நாட்களாக வெளியிடாமல் கிடப்பில் போட்டு இருந்தனர்.ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் என்று அடுத்தடுத்து ஜெயம் ரவி வெற்றியை சுவைத்திருக்கும் இந்த நேரத்தில் அவரின் விருப்பப்படமான பூலோகமும் வெளியாகவிருக்கிறது.


இந்நிலையில் சற்று முன்னர் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. 2 நிமிடங்களுக்கும் சற்றுக் குறைவாக ஓடக்கூடிய இந்த டிரெய்லர் முழுவதும் குத்துச்சண்டை மட்டுமே ஆக்கிரமித்து இருக்கிறது.


"அவன் பொழைப்புக்கு பாக்ஸர் நான் பொறந்ததுலேருந்து பாக்ஸர்" என்று ஆங்காங்கே கிடைத்த கேப்பில் ஜெயம் ரவி சிக்ஸர் அடித்திருக்கிறார். நாயகி த்ரிஷா ஒருசில இடங்களில் வந்து செல்கிறார்.


படத்தின் டிரெய்லர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்."எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பூலோகம் திரைப்படம் வருகின்ற 24 ம் தேதியும், டிரெய்லர் இன்று மாலையும் வெளியாகிறது" என்று படத்தின் நாயகன் ஜெயம்ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.


கிட்டத்தட்ட 2 வருடம் கழித்து வெளியாகும் இந்தப் படத்தில் குத்துச்சண்டை வீரராக ஜெயம் ரவி நடித்திருக்கிறார். சூர்யாவின் 24, விமலின் அஞ்சலை, ரமேஷ் சுப்பிரமணியத்தின் வில் அம்பு ஆகிய படங்களுடன் ஜெயம் ரவியின் பூலோகமும் 24 ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.


English summary
Actor Jayam Ravi Wrote on Twitter "A film very close to my heart releases on Dec 24th trishtrashers sonymusicindia Aascars enjoy the trailer at 6pm".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil