Just In
- 55 min ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 1 hr ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 2 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Sports
நம்பர் 1 டீமை வீழ்த்துமா சென்னை? வாய்ப்பே இல்லை.. அடித்து சொல்லும் விமர்சகர்கள்!
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- News
தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று- 4 பேர் உயிரிழப்பு
- Automobiles
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது விவசாய படம்.. விடப்போறது மாடர்ன் லுக்.. என்ன பண்ணலாம்? பின்னாடி டிராக்டரை வச்சிடலாம்!
சென்னை: பூமி படத்தின் 3வது லுக்கை சத்தம் போடாமல், நடிகர் ஜெயம் ரவி, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மன், மூன்றாவது முறையாக ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி படத்தை இயக்கி வருகிறார்.
மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
|
பூமி 3வது லுக்
ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தை லக்ஷ்மன் இயக்கி வருகிறார். முதல் லுக் விவசாயத்தை மையப்படுத்தியும், 2வது லுக், ஸ்கூட்டரில், ஜெயம் ரவி, நிதி கிராமத்து லுக்கில் செல்வதும் போல இருந்த நிலையில், 3வது லுக்கில் மாடர்ன் ரொமான்டிக் லுக்கில் ஜெயம் ரவி மற்றும் நிதி அகர்வால் கூலர்ஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ளனர்.

கோமாளிக்கு அடுத்து
கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து, ஜெயம் ரவி கைவசம் ஏகப்பட்ட படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. கோமாளி படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவி நடிப்பில் பூமி படம் வெளியாகிறது.

டீசர் எப்போ?
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1ம் தேதி ஜெயம் ரவியின் பூமி படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது, பூமி படத்தின் முன்றாவது லுக் போஸ்டரை வெளியிட்ட ஜெயம் ரவி, வரும் மார்ச் 9ம் தேதி மாலை 5 மணிக்கு அந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

ஹன்சிகா இல்லை
இயக்குநர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் என இரு படங்களிலும் நாயகியாக நடிகை ஹன்சிகா நடித்திருந்தார். இந்நிலையில், பூமி படத்தில், ஹன்சிகா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக டோலிவுட் ஹீரோயின் நிதி அகர்வால் நடித்து வருகிறார்.

செம கிளாஷ்
ஏப்ரல் மாதத்தில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சூர்யாவின் சூரரைப் போற்று படங்கள் மோத உள்ளன. அதனை தொடர்ந்து, மே மாதம் 1ம் தேதி ரிலீசாகும் ஜெயம் ரவியின் பூமி படத்திற்கு ஏகப்பட்ட போட்டிகள் காத்திருக்கின்றன. விக்ரமின் கோப்ரா, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் கார்த்தியின் சுல்தான் என மே மாதம் செம கிளாஷ் இருக்கு.

ஏன் இப்படி?
ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் டைட்டிலுக்கு ஏற்றவாறு விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, வெளியாகியுள்ள மூன்றாவது லுக் போஸ்டரில், மாடர்ன் உடையில் ஜெயம் ரவியும், நிதி அகர்வாலும் ரொமான்ஸ் பண்ண, இந்த படம் விவசாய படம் என்பதை தெளிவுபடுத்த பின்னாடி, டிராக்டரும், மாட்டு வண்டி சக்கரமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.