»   »  ஜெயம் ரவியின் மலைவாசி இளைஞன் கெட்டப்!

ஜெயம் ரவியின் மலைவாசி இளைஞன் கெட்டப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏற்கும் வேடத்துக்கேற்ற மாதிரி தன் உடலமைப்பை மாற்றிக் கொள்ளும் நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர்.

தனி ஒருவன் படத்துக்குப் பிறகு பார்த்துப் பார்த்து கதை தேர்வு செய்து வரும் ரவி, அடுத்து இயக்குநர் விஜய்யின் புதிய படத்தில் நடிக்கிறார்.

Jayam Ravi's new getup released

இந்தப் படத்தை தனது 'திங் பிக் ஸ்டூடியோஸ்' சார்பில் தயாரித்து இயக்குகிறார் விஜய். இந்தப் படம், ஒரு மலைவாசி இளைஞரைப் பற்றிய கதை. மலைவாசி இளைஞராக ஜெயம் ரவி நடிக்கிறார்.

இந்த கதாபாத்திரத்துக்காக அவர் புதிய தோற்றத்துக்கு மாறுகிறார். திடகாத்திரமான உடற்கட்டை கொண்டு வருவதற்காக, 'ஜிம்'மில் அதிக நேரத்தை செலவிடுகிறார். புரதம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிடுகிறாராம்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக மும்பை அழகி சாய்ஷா ஷீகல் நடிக்கிறார்!

English summary
The new getup of Jayam Ravi for Director Vijay's untitled movie released today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil