»   »  ஜெயம் ரவியின் புதிய படம் போகன்... மார்ச் 18-ல் படப்பிடிப்பு!

ஜெயம் ரவியின் புதிய படம் போகன்... மார்ச் 18-ல் படப்பிடிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கம் பாக்ஸ் ஆபீஸில் ஜெயம் ரவியின் இமேஜ் நாளுக்கு உயர்ந்து வருகிறது. தனி ஒருவனுக்குப் பிறகு வெளியான மிருதனும் வசூலில் சொதப்பவில்லை. எனவே அவரது அடுத்தபடம் என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கவே செய்கிறது.

மிருதன் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் புதிய படத்துக்கு போகன் என்று தலைப்பிட்டுள்ளனர்.


இந்தப் படத்தை பிரபு தேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மன் இயக்குகிறார்.


Jayam Ravi's next Bogan

இந்தப் படத்திலும் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்கப் போகிறவர் அரவிந்த்சாமி.


தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய கதையாக போகன் அமையும் என்கிறார் இயக்குநர்.


மார்ச் 18-ம் தேதி படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்குகிறது.

English summary
Jayam Ravi's next film has been titled as Bogan and the first schedule will begin on March 18th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil