»   »  விஜய்யுடன் கைகோர்க்கும் ஜெயம்ரவி

விஜய்யுடன் கைகோர்க்கும் ஜெயம்ரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது என்ன மாயம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய்யின் அடுத்த படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜெயம் ரவி தற்போது நாய்கள் ஜாக்கிரதை பட இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் மிருதன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் விஜய்யின் அடுத்த படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Jayam Ravi's Next Movie

தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மதிப்பு திரையுலகில் அதிகமாகி இருக்கிறது. மேலும் ரவியும் இந்த வெற்றியைத் தக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் விஜய் தனது அடுத்த நாயகனாக ஜெயம் ரவியைத் தேர்வு செய்திருக்கிறார். முழுக்கதையையும் கேட்ட ரவி படத்தில் நடிக்க உடனே சம்மதம் சொல்லி விட்டாராம்.

இந்தப் படத்தின் தலைப்பு லெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்ற ரீதியில் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று திரையுலகினர் கூறுகின்றனர்.

ஜெயம் ரவி சம்மதத்தால் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் அடுத்தடுத்த வேலைகளில் உடனடியாக இறங்கியிருக்கிறார். விரைவில் இது தொடர்பான முறையான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகின்றனர்.

English summary
After Completing Mirudhan Jayam Ravi's Next Team up with Director A.L.Vijay. Sources Said The Official Announcement of the Film will Be Released Soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil