»   »  சல்மான், அக்சய், அஜய் தேவ்கன் படங்களை பின்னுக்குத்தள்ளி வசூலில் தனியாக கலக்கும் ஜெயம் ரவி

சல்மான், அக்சய், அஜய் தேவ்கன் படங்களை பின்னுக்குத்தள்ளி வசூலில் தனியாக கலக்கும் ஜெயம் ரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி - அரவிந்த் சாமி - நயன்தாரா கூட்டணியில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் யூ எஸ் பாக்ஸ் ஆபீஸில் ஹிந்தித் திரைப்படங்களின் ஆதிக்கத்தை வீழ்த்தி வசூலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

கடந்த வாரம் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது, சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 2 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து இருக்கிறது படம்.


தற்போது யூ எஸ் பாக்ஸ் ஆபீஸில் சல்மானின் பஜ்ரங்கி பைஜான், அக்சய் குமாரின் பிரதர்ஸ் மற்றும் அஜய் தேவ்கனின் திரிஷ்யம் போன்ற படங்களை பின்னுக்குத்தள்ளி வசூலில் சாதனை புரிந்து வருகிறது ஜெயம் ரவியின் தனி ஒருவன்.


தனி ஒருவன்

தனி ஒருவன்

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் வெளியான தனி ஒருவன் திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. தமிழ்நாட்டில் இப்படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


திரையிட்ட இடமெல்லாம் திருவிழா

திரையிட்ட இடமெல்லாம் திருவிழா

தனி ஒருவன் திரையிட்ட இடமெல்லாம் தொடர்ந்து வசூலில் முன்னிலை வகித்து வருகிறது, தற்போது யூ எஸ் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 49.49 லட்சங்களை ஒரே வாரத்தில் வசூலித்து இருக்கிறது. 18 திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் வசூலில் வேகமாக அதிகரித்து வருவதால், தொடர்ந்து திரையரங்குகள் அதிகமாக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.


சல்மான், அக்சய், அஜய் தேவ்கன்

சல்மான், அக்சய், அஜய் தேவ்கன்

இந்தியின் முன்னணி நடிகர்களாகத் திகழும் சல்மான் கான், அக்சய் குமார், அஜய் தேவ்கன் ஆகியோரின் படங்களான பஜ்ரங்கி பைஜான், பிரதர்ஸ் மற்றும் திரிஷ்யம் ஆகிய படங்களை வசூலில் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறது ஜெயம் ரவியின் தனி ஒருவன்.


டாப்பில் பாண்டம் திரைப்படம்

டாப்பில் பாண்டம் திரைப்படம்

சைப் அலிகானின் பாண்டம் திரைப்படம் 93 திரையரங்குகளில் வெளியாகி சுமார் 1.38 கோடிகளை வசூலித்து யூ எஸ் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தனி ஒருவனுக்கு திரையரங்குகள் அதிகரிக்கும் பட்சத்தில் பாண்டம் படத்தின் வசூல் குறைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.


வேகமாக முன்னுக்கு வரும் உப்பி 2

வேகமாக முன்னுக்கு வரும் உப்பி 2

பாண்டம் மற்றும் தனி ஒருவன் திரைப்படங்களுக்கு அடுத்த இடத்தை கன்னட திரைப்படமான உப்பி 2 பிடித்திருக்கிறது. 21 திரையரங்குகளில் வெளியான உப்பி 2 சுமார் 21.26 லட்சங்களை வசூலித்து இருக்கிறது.


தற்போதைய நிலையில் யூ எஸ் பாக்ஸ் ஆபீசைப் பொறுத்தவரை தென்னிந்தியத் திரைப்படங்களின் கையே ஓங்கியிருக்கிறது, இது தொடருமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.English summary
Jayam Ravi starrer "Thani Oruvan" has performed well at the US box office and has beat big Bollywood films like "Bajrangi Bhaijaan", "Drishyam" and "Brothers" in its first weekend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil