»   »  பாக்ஸ் ஆபிஸ்: ராஜமௌலியின் "பாகுபலி"யை முறியடித்தது... ஜெயம் ரவியின் "தனி ஒருவன்"

பாக்ஸ் ஆபிஸ்: ராஜமௌலியின் "பாகுபலி"யை முறியடித்தது... ஜெயம் ரவியின் "தனி ஒருவன்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான பாகுபலி படத்தின் வசூலை தற்போது முறியடித்து இருக்கிறது ஜெயம் ரவியின் தனி ஒருவன் திரைப்படம்.

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியான பாகுபலி படத்தின் சென்னை வசூலை முறியடித்து இருக்கிறது, ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம்.


தனி ஒருவன் தவிர கடந்த வாரம் வெளியான விஷாலின் பாயும் புலி மற்றும் சவாலே சமாளி போன்ற படங்களின் வசூல் நிலவரங்களை இங்கே காணலாம்.


தனி ஒருவன்

தனி ஒருவன்

ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் ராஜமௌலியின் பாகுபலி வசூல் சாதனையை சென்னையில் முறியடித்து சாதனை புரிந்திருக்கிறது. முதல் வாரத்தில் 240 காட்சிகள் மூலம் சுமார் 1.28 கோடியை படம் வசூலித்து இருந்தது.


பாகுபலி vs தனி ஒருவன்

பாகுபலி vs தனி ஒருவன்

வெளியான முதல் வாரத்தில் சுமார் 1.66 கோடியை சென்னையில் மட்டும் வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி. 2 வது வாரத்தில் சுமார் 1.05 கோடியை வசூலித்து இருந்தது பாகுபலி, ஆனால் 2 வது வாரத்தில் சுமார் 1.06 கோடியை வசூலித்து பாகுபலி சாதனையை முறியடித்து இருக்கிறது தனி ஒருவன்.


10 நாட்கள்

10 நாட்கள்

முதல் 10 நாட்களில் சுமார் 3.84 கோடியை சென்னை பாக்ஸ் ஆபிசில் வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி, ஆனால் 3.35 கோடியை வசூலித்து பாகுபலியின் இந்த சாதனையை முறியடிக்கத் தவறி விட்டது தனி ஒருவன். எனினும் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் பாகுபலி வெளியாகி இந்தத் தொகையை வசூலித்ததால், பாகுபலியுடன் ஒப்பிடும் போது தனி ஒருவன் வசூல் அதிகம் என்றே கூறவேண்டும்.


பாயும் புலி

பாயும் புலி

விஷாலின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பாயும் புலி திரைப்படம் முதல் வாரத்தில் சுமார் 6 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து இருந்தது. இந்நிலையில் 2 வது வாரத்தில் சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 80.55 லட்சங்களை வசூலித்து இருக்கிறது படம். 231 காட்சிகள் திரையிடப்பட்டு இந்தத் தொகையினை வசூலித்து இருக்கிறது விஷாலின் பாயம் புலி.


சவாலே சமாளி

சவாலே சமாளி

அசோக் செல்வனின் சவாலே சமாளி மற்ற பெரிய படங்கள் கொடுத்த சவால் காரணமாக, சவாலில் வெற்றி பெறாமலே போய்விட்டது. கடந்த வாரம் 60 காட்சிகள் திரையிடப்பட்டு வெறும் 6 லட்சங்களை மட்டுமே வசூலித்து இருக்கிறது படம்.


எல்லாம் ஒரு வெளம்பரம் தான்....English summary
"Thani Oruvan", has beaten a record set by SS Rajamouli's magnum opus "Baahubali" at the box office in Chennai! The Jayam Ravi and Arvind Swamy starrer has surpassed the collection of Baahubali's second weekend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil