பிரபு தேவா, ராஜு சுந்தரம், ஸ்ரீதர் மாஸ்டர்களிடம் கஷ்டப்பட்ட ஜெயம் ரவி... எப்படி தெரியுமா?

சென்னை: நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியுடன் இணைந்து ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளைய மறுநாள் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவிக்கு என்றே பிரத்தியேகமாக யூடியூப் சேனல் ஒன்று விழா நடத்தி இருந்தது.

அதில் பேசிய ஜெயம் ரவி நடன இயக்குநர்கள் பிரபுதேவா, ராஜு சுந்தரம் மற்றும் ஸ்ரீதரிடம் பணிபுரிந்த அனுபவம் பற்றி வேடிக்கையாக கூறியுள்ளார்.

 தூங்கிய ஜெயம் ரவி

தூங்கிய ஜெயம் ரவி

ஒருமுறை நடிகர் சங்க தேர்தலின் போது இரண்டு தரப்பினருக்கிடையே சண்டை நடந்தது. அதன் பின்னர் தேர்தலில் வாக்களிக்க வந்த ஜெயம் ரவியிடம் அந்தப் பிரச்சனை பற்றி கேட்டபோது எனக்கு ஒன்றும் தெரியாதுங்க நான் தூங்கிட்டேன் என்று பதிலளித்து இருந்தார். அது இப்போதுவரை மீம் மெட்டீரியலாக வைரலாக உள்ளது. அந்த மீமை இந்த விழாவில் போட்டு காண்பித்து எந்தப் படத்தைப் பார்த்து நீங்கள் திரையரங்கிலேயே தூங்கி இருக்கிறீர்கள் என்று ஜெயம் ரவியிடம் கேட்டபோது, பிறரது படத்தை சொல்லாமல் தன்னுடைய படத்தை பார்க்கும் போதே ஒரு முறை திரையரங்கில் தூங்கியதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். ஆனால் எந்தப் படம் என்பதை சொல்ல மாட்டேன் ரகசியம் என்றும் தெரிவித்திருந்தார்.

 பிரபு தேவாவுடன் 2 படம்

பிரபு தேவாவுடன் 2 படம்

பிரபுதேவா இயக்கியிருந்த எங்கேயும் காதல் திரைப்படத்தில் ஜெயம் ரவிதான் கதாநாயகனாக நடித்திருந்தார். அதேபோல பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் அவர் தயாரித்திருந்த போகன் திரைப்படத்தில் ஜெயம் ரவியை தான் நடிக்க வைத்தார். மேலும் ஒரு பேட்டியில் குறிப்பிடும் போது கூட கதாநாயகர்களில் நன்கு நடனமாடக்கூடியவர் ஜெயம் ரவி என்று பிரபுதேவா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடிப்படையில் சிறு வயதிலிருந்தே ஜெயம் ரவி ஒரு பரதநாட்டிய நடன கலைஞர் என்பது கூடுதல் தகவல்.

 டான்ஸ் கஷ்டம்

டான்ஸ் கஷ்டம்

ரோமியோ ஜூலியட் திரைப்படம் வெளியான போது அதில் இடம்பெற்றிருந்த அடியே அடியே பாடலைப் பார்த்த பிரபுதேவா ஜெயம் ரவிக்கு கால் செய்து, கதாபாத்திரத்துடன் ஒன்றி நடனம் ஆடுவது கஷ்டம். அதை நீ சிறப்பாக செய்திருக்கிறாய் என்று பாராட்டினாராம். டான்ஸ் கஷ்டம் என்று பிரபுதேவா தனக்கு கூறியது ஆச்சரியமாக இருந்ததாக ஜெயம் ரவி அந்த நிகழ்வில் பகிர்ந்துள்ளார்.

 மூன்று மாஸ்டர்கள்

மூன்று மாஸ்டர்கள்

எங்கேயும் காதல் பாடல் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் தான் கோரியோகிராஃப் செய்திருப்பார். அவர் ஒரு சில நடன அசைவுகளை போட்டு காண்பித்தால், பிரபுதேவா மாஸ்டர் சிலவற்றை ஆடிக் காண்பிப்பாராம். அந்த படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த ராஜசுந்தரம் மாஸ்டரும் தன்னுடைய பாணியில் சில ஸ்டெப்ஸை போட்டு காண்பிப்பாராம். மூவருக்குள் முடிவு செய்து ஏதாவது ஒன்றை கூறுங்கள் என்று ஜெயம் ரவி கூறி இறுதியாக மூவர் சொன்ன ஸ்டெப்ஸ்களையும் மிக்ஸ் செய்து ஒரு விதமாக ஆடிக் காட்டி ஒவ்வொரு ஷாட்டிலும் மூவரிடமும் கஷ்டப்பட்டு ஓகே டேக் வாங்கி ஆடினேன் என்று ஜெயம் ரவி அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X