யங் விஜய் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார் வரை.. விஜய் பிறந்தநாள் சிடிபியில் என்னவெல்லாம் இருக்கு பாருங்க!

சென்னை: நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாள் விழா வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான ஸ்பெஷல் காமன் டிபியை நடிகர் ஜெயம் ரவி தற்போது வெளியிட்டுள்ளார்.

இளைய தளபதி என அன்போடு அழைத்து வந்த ரசிகர்கள் தற்போது தளபதி என நடிகர் விஜய்யை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் அன்புடன் கொடுத்த அந்த பட்டத்தை எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் நடிகர் விஜய் தொடர்ந்து தனது படங்களிலும் பயன்படுத்தி வருகிறார்.

48 வயசு

48 வயசு

1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாடகி சோபா சந்திரசேகருக்கு மகனாக பிறந்தவர் நடிகர் விஜய். சிறு வயதிலேயே தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் நாளைய தீர்ப்பு மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அடியெடுத்து வைத்தார். 47 வயதிலும் பீஸ்ட் படத்தில் ஹலமதி ஹபிபோ பாடலுக்கு அப்படியொரு ஆட்டம் போட்டுள்ள விஜய் 48வது பிறந்தநாளுக்கு பிறகும் தளபதி 66, தளபதி 67 என தனது நடன திறமையால் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

கொண்டாட்டம் ஆரம்பம்

கொண்டாட்டம் ஆரம்பம்

ஜூன் மாதம் ஆரம்பித்தாலே அது நடிகர் விஜய்யின் பிறந்தநாள் மாதம் என்றே விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விடுவார்கள். இந்த ஆண்டும் ஏகப்பட்ட கொண்டாட்டங்களை கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள், பல முன்னணி பிரபலங்களை வைத்து நடிகர் விஜய்யின் பிறந்தநாள் காமன் டிபி, மாஷ் அப் என ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஜெயம் ரவி வெளியிட்ட காமன் டிபி

ஜெயம் ரவி வெளியிட்ட காமன் டிபி

நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி தற்போது அட்டகாசமான காமன் டிபி ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தளபதி விஜய்யின் 48வது பிறந்தநாளுக்கான பர்த்டே டிபியை வெளியிடுவதில் ரொம்பவே மகிழ்ச்சி என ட்வீட் போட்டுள்ளார். காமன் டிபியை பார்த்ததுமே விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்ட மோடுக்கு மாறிவிட்டனர்.

யங் விஜய் டு ரோல்ஸ் ராய்ஸ்

யங் விஜய் டு ரோல்ஸ் ராய்ஸ்

இந்த காமன் டிபியின் முன்னணியில் பீஸ்ட் வீரராகவன் தான் போஸ்டரை அலங்கரிக்கிறார். மேலும், கில்லி விஜய், யங் விஜய், துப்பாக்கி விஜய், பூவே உனக்காக விஜய், மெர்சல் விஜய் என ஏகப்பட்ட விஜய் படங்களின் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி ஜேடி, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார், கால் பந்து, துப்பாக்கி, விஜய் மக்கள் இயக்கம் என பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜெயம் ரவிக்கு நன்றி

ஜெயம் ரவிக்கு நன்றி

அகிலன், பொன்னியின் செல்வன் எனபடுபிசியாக இருக்கும் நிலையில், நடிகர் விஜய்க்காக ஜெயம் ரவி பண்ணி உள்ள இந்த விஷயம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. "நன்றி ஜெயம் ரவி அண்ணா" என்றும் பொன்னியின் செல்வன், அகிலன் படங்களுக்காக வெயிட்டிங் என்றும் விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X