»   »  நடிகை ஜெயமாலா மீது செருப்பு வீச்சு

நடிகை ஜெயமாலா மீது செருப்பு வீச்சு

Subscribe to Oneindia Tamil

கேரளா மாநிலம் காசர்கோட்டில் நாடக விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை ஜெயமாலா மீது விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் செருப்பு வீசி போராட்டம் நடத்தினர்.

முன்னாள் கன்னட நடிகையான ஜெயமாலா, கேரளா ஐய்யப்பன் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஐய்யப்பன் சிலையை தொட்டு வணங்கியதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

ஆனால் கோவிலில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் ஜெயமாலாவால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறிய கோவில் தேவஸ்தானம் போர்டு அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஜெயமாலாவிற்கு எதிராக தந்தூரிகளும், பல அமைப்புகளும் போராட்டம் நடத்தின.

ஆனால் நடிகை ஜெயமாலா, கோவின் கர்ப்ப கிரகத்திற்கு சென்று ஐய்யப்பன் சிலையை தொட்டு வணங்கினேன். இதற்கு அங்கிருந்த குருக்கள் உதவினர். இந்த உண்மை தலைமை குருக்களுக்கு தெரியும் என கூறினார்.

பின்னர் இது குறித்து விசாரித்த கேரளா போலீஸார், ஜெயமாலாவும் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடான உன்னி கிருஷ்ணா பனிகரும் சேர்ந்து கோவில் நிர்வாகத்தின் பெயரைக் கெடுக்க திட்டமிட்டு இவ்வாறு கதை விட்டதாகக் கூறினர்.

இந் நிலையில் நடிகை ஜெயமாலா மங்களூர் அருகே காசர்கோடு என்ற இடத்திற்கு நாடக விழாவில் பங்கேற்க வந்திருந்தார். இந்த செய்தியை அறிந்த விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அவரது காரை முற்றுகையிட்டனர்.

ஜெயமாலா மீது கல் எறிந்தும், செருப்புகள் வீசியும் போராட்டம் நடத்தினர். இதனால் உடனே பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார்

இந்த சம்பவம் குறித்து ஜெயமாலா கூறியபோது,

இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை. எதற்காக போராட்டம் நடத்தினர், மக்கள் மனதில் என்ன இருக்கிறது என தெரியவில்லை. நான் கடவுளை தொட்டு அவமானப்படுத்தியதாக கூறப்பட்டது முடிந்து போன விஷயம். இந்த போராட்டம் தேவையில்லாத ஒன்றாகும் என்றார்.

Please Wait while comments are loading...