»   »  முதல் படத்திலேயே மது அடிமைகளை மீட்கும் நாயகனான ஜெயானந்த்!

முதல் படத்திலேயே மது அடிமைகளை மீட்கும் நாயகனான ஜெயானந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் ஒரு நடிகனாக இடம்பிடிப்பது அத்தனை சுலபமல்ல... வெளியிலிருந்து பார்த்தால் அது ஒரு பெரிய விஷயமில்லை என்பது போலத்தான் தெரியும். ஆனால் உண்மையில் பெரும்பாடு பட வேண்டும்.

இன்றைக்கு திரையில் மின்னும் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஏகப்பட்ட பாடுகள் இருக்கும்.

Jayanand, Villain of Maragatha Naanayam

அப்படி பெரும்பாடுபட்டு திரைக்கு வந்த நாயகர்களில் ஒருவர் ஜெயானந்த். காஞ்சனா 2 படத்தில் சின்ன வேடத்தில் வந்தவர், திறப்பு விழா என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். முதல் படத்திலேயே மதுவுக்கு அடிமையானவர்களை மீட்கும் பாத்திரம். நல்ல பெயர்.

அடுத்து அவர் நடிப்பில் வெளியாகும் படம் மரகத நாணயம். ஹீரோ ஆதிக்கும் இவர்தான் வில்லன். படம் நாளை வெளியாகிறது.

Jayanand, Villain of Maragatha Naanayam

ஜிவி பிரகாஷுடன் ஒரு படம், விஷ்ணு விஷாலுடன் ஒரு படம் என ஹெல்த்தியாக உள்ளது இவரது சினிமாகிராஃப்.

ஜெயானந்துக்கு இப்போதுதான் திருமணம் நடந்தது. கவிஞர் வைரமுத்துவின் உறவுப் பெண்ணை மணந்திருக்கிறார். நடிகர் சிவகுமார்தான் நடத்தி வைத்தார்.

English summary
Jayanand is a newly introduced hero through Thirappu Vizha is now doing in handful of good movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil