மகன் இறப்பு.. மீளாத பாரதிராஜா.. இப்போது எப்படி இருக்கிறார்?.. எங்கு இருக்கிறார்?.. உண்மையில் பாவம்தான்

சென்னை: கோலிவுட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் இன்றுவரை க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர் தனது மகன் மனோஜை தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். ஆனால் மனோஜுக்கு சொல்லிக்கொள்ளும்படி திரை வாழ்க்கை அமையவில்லை. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார் மனோஜ்.

16 வயதினிலே படத்தில் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை அவுட் டோருக்கு அழைத்து சென்ற பெருமைக்கு சொந்தக்காரர். அவர் படம் இயக்க வந்த பிறகுதான் கிராமங்களிலிருந்து பலர் சென்னைக்கு திரைப்பட கனவோடு தைரியமாக படையெடுக்க ஆரம்பித்தனர். அதேபோல் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்டோர் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் திகழ்ந்தவர்கள்.

எல்லாம் க்ளாசிக்தான்: பாரதிராஜா 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். அவரது ஒவ்வொரு படமும் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்பவை. அவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு ஓம் (மீண்டும் ஒரு மரியாதை) என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் நடிகராக பல படங்களில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளிவருகிறார்.

பாரதிராஜாவின் ஆசை: சினிமாவில் இயக்குநராக மாறுவதற்கு முன்பு எப்படியாவது நடித்துவிட வேண்டுமென்பதுதான் பாரதிராஜாவின் ஆசையாக இருந்தது. ஆனால் காலம் அவரை இயக்குநராக்கியது. அதேசமயம் அவரது மகன் மனோஜுக்கு இயக்குநராக வேண்டுமென்பதுதான் ஆசை. பாரதிராஜாவோ நடிகராக அறிமுகப்படுத்தினார். முதல் படத்தை தானே இயக்கி ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைத்தார். பாடல்கள் எல்லாம் பட்டித்தொட்டியெங்கும் ஹிட். ஆனால் படம் சரியாக போகவில்லை.

Jayaraj Shares Bharathiraja s Current Situation after manoj death
Photo Credit:

மனோஜ் உயிரிழப்பு: தாஜ்மஹால் தொடங்கி ஏராளமான படங்களில் நடித்த மனோஜுக்கு சினிமாவில் பெரிய பிரேக் எதுவும் கிடைக்கவில்லை. அஹ்டனைத் தொடர்ந்து மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படமும் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார் மனோஜ். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. குறிப்பாக பாரதிராஜாவை மீளா துயரில் ஆழ்த்தியது.

சகோதரர் பேட்டி: இந்நிலையில் மனோஜ் இறந்து இத்தனை மாதங்கள் கழித்து பாரதிராஜா எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவரது சகோதரர் ஜெயராஜ் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "மகனை மறக்க முடியாமல் பாரதிராஜா தவித்துவருகிறார். எப்படியாவது அந்தத் துயரத்திலிருந்து வெளியே வருவதற்கு தனது மகள் வீட்டுக்கு மலேசியா சென்றிருக்கிறார். கடந்த மூன்று வருடங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. இப்போது மகனை இழந்து மன வேதனையிலும் இருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X