»   »  பாஹ்மதி: பிரபாஸ்-அனுஷ்காவிற்காக மொட்டையடித்துக் கொண்ட ஜெயராம்

பாஹ்மதி: பிரபாஸ்-அனுஷ்காவிற்காக மொட்டையடித்துக் கொண்ட ஜெயராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகரான ஜெயராம் தன்னுடைய அடுத்த படத்திற்காக எடுத்திருக்கும் முயற்சி, அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

'தெனாலி' உட்பட ஏராளமான படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் ஜெயராம்.இவர் அடுத்ததாக பாஹ்மதி என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தெலுங்குப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Jayaram Stuns All With His New Look

இப்படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய தலைமுடியை முழுவதும் எடுத்த ஜெயராம், தற்போது மொட்டைத்தலையுடன் அடர்த்தியாக தாடி வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஜெயராமின் இந்தப் புதிய தோற்றம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பாகுபலி, ருத்ரமாதேவி பாணியில் உருவாகவிருக்கும் பாஹ்மதி படத்தில் பிரபாஸ்-அனுஷ்கா நாயகன், நாயகியாகவும், ஜெயராம் ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Bhagmati: Actor Jayaram could be seen sporting a tonsured look, with a thick beard.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil