»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இது மலையாள திரையுலகினருக்கு பொல்லாத காலம் போலிருக்கிறது.

சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை ரெய்டில் அதிகம் பணம் இழந்தவர் நடிகர் ஜெயராம் தானாம். அதே போல அமெரிக்காவில் கடந்தவாரம் தீவிரவாதி என நினைத்து கமாண்டோக்களால் அடாவடியாக நடத்தப்பட்ட நடிகை சம்யுக்தா வர்மா இப்போது அமெரிக்காவில்தனது பாஸ்போர்ட்டையும் பணத்தையும் தொலைத்துவிட்டு பரிதவித்து வருகிறார்.

முதலில் ஜெயராம் விவகாரம்:

அமெரிக்காவில் சுமார் 1 மாத காலமும் வளைகுடா நாடுகளில் சுமார் 1 வார காலமும் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று சேர்த்த பெரும் பணத்தை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டிலேயே வைத்திருந்தாராம் ஜெயராம்.

அதை அள்ளிச் சென்றுவிட்டது வருமான வரித்துறை. அதே போல அவரது வீட்டின் சைஸை பார்த்து அதிர்ந்து போனார்களாம் அதிகாரிகள்.

இந்த வீட்டில் ரெய்ட் நடந்த அதே நேரத்தில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இன்னொரு வீட்டையும் அதிகாரிகள்முற்றுகையிட்டனர். அதே போல அவரது சகோதரி வீடு, ஆஸ்தான மேக்கப் மேன் வீடு, குடும்ப டாக்டரின் வீடு ஆகிய இடங்களிலும்சோதனை நடந்தது.

சென்னையில் இந்த ரெய்ட்கள் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் கேரளாவில் அவருக்கு சொந்தமான வீடுகள், உறவினர்கள்வீடுகளிலும் ரெய்ட் நடந்தது. கொச்சியில் பெரம்பாவூரில் உள்ள அவரது பெற்றோர் வீடு, திருவனந்தபுரத்தில் உள்ள மனைவி பார்வதியின்பெற்றோர் வீட்டிலும் ரெய்ட் நடந்தது.

இந்த ரெய்ட்களில் பல கோடி கருப்புப் பணம் வருமான வரித்துறையினரிடம் சிக்கியுள்ளது.

அடுத்தபடியாக அதிக கருப்புப் பணத்தை இழந்தது பிரசாந்த். குறைந்த அளவில் பணம் இழந்தது அஜீத்.

இது சம்யுக்தா கதை...

கடந்த இரு வாரமாக அமெரிக்காவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் சம்யுக்தா வர்மா கடந்த வாரம் சிகாக்கோவில் இருந்து விமானத்தில்செல்லும்போது தீவிரவாதி எனக் கருதப்பட்டு எப்.பி.ஐயால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டார்.

இன்னும் அவர் அமெரிக்காவில் தான் இருக்கிறார். இரு தினங்களுக்கு முன் நியூயார்க்கில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஷாப்பிங்கில்இருந்த அவரிடம் கை பையை யாரோ அடித்துவிட்டனர். அதில் ரூ. 1.5 லட்சம் அளவுக்கு அமெரிக்க டாலர்கள் மற்றும் பாஸ்போர்ட்இருந்தது.

இது தொடர்பாக இந்தியத் தூதரகத்திடம் புகார் தந்துள்ளார். அவர்கள் புதிய பாஸ்போர்ட் தர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அடுத்தவாரம் புளோரிடாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் இந்தியா வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil