»   »  2 ஆண்டு காதல், 32 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்திய நடிகை ஜெயசுதா, நிதின்

2 ஆண்டு காதல், 32 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்திய நடிகை ஜெயசுதா, நிதின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நிதின் கபூரும், நடிகை ஜெயசுதாவும் 2 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

நடிகை ஜெயசுதாவின் கணவரும், தயாரிப்பாளருமான நிதின் கபூர் மும்பையில் உள்ள தனது அலுவலகத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நிதின் பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினர் ஆவார்.

காதல்

காதல்

ஜெயசுதாவும், நிதின் கபூரும் இரண்டு ஆண்டுகள் காதலித்தனர். அதன் பிறகு கடந்த 1985ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு நிஹார் மற்றும் ஸ்ரேயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜெயசுதா

ஜெயசுதா

முன்னதாக நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயசுதா கூறுகையில், நிதினை பார்த்த நாளே அவரது அழகு என்னை கவர்ந்தது. அவர் பேசும் விதம் பிடித்திருந்தது. ஆனால் இது கண்டதும் காதல் இல்லை என்றார்.

நிதின்

நிதின்

ஜெயசுதா பற்றி நிதின் முன்பு கூறியதாவது, நானும், அவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குள் ஸ்பார்க் எல்லாம் இல்லை. ஆனால் நாங்கள் மும்பை மற்றும் சென்னைக்கு இடையே பயணம் செய்யத் துவங்கியபோது தான் ஒருவரையொருவர் மிஸ் செய்ததை உணர்ந்தோம் என்றார்.

மரணம்

மரணம்

நிதின் கபூரின் மரணத்தால் பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிதினை இழந்து வாடும் ஜெயசுதா மற்றும் மகன்களுக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

English summary
Producer Nitin Kapoor who allegedly committed suicide married actress Jayasudha after in love with her for two years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil