»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் ஜெயலலிதாவின் முகத்திரையை கிழிக்கும் விதத்தில் படம் தயாரிக்க உள்ளதாக பிரபலதெலுங்கு படத் தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.

ஜெயேந்திரரின் தீவிர பக்தரான இவர் சமீபத்தில், காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்.

இந் நிலையில் ஜெயேந்திரர் நலமுடன் இருக்க வேண்டி திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற கிருஷ்ணா ரெட்டி, பின்னர்வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.

அங்கு சுவாமி தரிசனம் முடித்த பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

ஜெயேந்திரர் தமிழக அரசால் பழிவாங்கப்பட்டதை கண்டித்தும், அவர் எந்தக் குற்றமும் செய்யாதவர் என்பதை நாட்டு மக்களுக்குதெரிவிக்கவும், "ஜெயேந்திரர் பேசுகிறார் என்ற பெயரில் ஒரு திரைப் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்.

கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஜெயேந்திரர் பக்தர்களும், இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களும்சேர்ந்து இப் படத்தை தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் ஜெயேந்திரர் ரோலில் தெலுங்கு சினிமா உலகைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரும், விஜயேந்திரர் வேடத்தில் தமிழ்சினிமாவைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரும் நடிக்க உள்ளனர்.

காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம் குமார், கூடுதல் எஸ்.பி. சக்திவேல் ஆகியோரது வேடங்களில் பிரபல தமிழ்ப்பட வில்லன் நடிகர்கள்நடிக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முதலில் இந்தப் படம் வெளியாகும்.

படத்தில் காஞ்சிபுரத்தில் ஜெயேந்திரர் செய்து வந்த தொண்டு, சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸார் அவர் மீது பொய்யாககுற்றம் சாட்டி சிறையில் அடைத்தது முதல் ஜாமீனில் வெளிவந்து கலவையில் தங்கியிருப்பது வரையிலான காட்சிகள்இடம்பெறும்.

இதுதவிர, தன்மீது போடப்பட்ட வழக்குகளிலிருந்து ஜெயேந்திரர் எப்படி வெளியே வருகிறார், அவர் மீது பொய் வழக்கு போட்டபோலீஸாரின் நிலை, மற்றும் ஆட்சி மாற்றம் (??) குறித்தும் தெளிவாக திரைக்கதை அமைக்கப்படும்.

புல்லையா கிரி என்பவர் படத்தை இயக்குகிறார். இதில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 45 நாட்களில் இப்படம் தயாரிக்கப்படும்.

இது தவிர படத்தில் தற்போதைய தமிழகத்தின் அரசியல் நிலை, கடந்த காலத்தில் நிர்க்கதியாக இருந்தவர்கள் (சசிகலா?)இப்போது எப்படி உயர்ந்த நிலைக்கு வந்தனர், இதற்காக இவர்கள் யாரையெல்லாம் எப்படியெல்லாம் ஏமாற்றினர் ஆகியவற்றைவிளக்கும் காட்சிகள் இடம்பெறும்.

இப்படத்தை பார்ப்பவர்களுக்கு சங்கராச்சாரியார்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் என்பது விளங்கும். இதன் மூலம் தமிழகமுதல்வரின் முகத்திரை கிழிக்கப்படும். ஜெயேந்திரர் மீது பொய் வழக்கு போட்ட காஞ்சிபுரம் போலீஸார் இந்தப் படத்தைபார்த்தால் வெட்கித் தலை குனிவார்கள்.இப்படத்தை பார்ப்பவர்களுக்கு சங்கராச்சாரியார்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் என்பது விளங்கும். இதன் மூலம் தமிழகமுதல்வரின் முகத்திரை கிழிக்கப்படும். ஜெயேந்திரர் மீது பொய் வழக்கு போட்ட காஞ்சிபுரம் போலீஸார் இந்தப் படத்தைபார்த்தால் வெட்கித் தலை குனிவார்கள்.

இப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்து மதத்தை காக்கவும், ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யவும்பயன்படுத்தப்படும்.

இப்படம் வெளிவந்தால் தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றார்.

ஜெயேந்திரரின் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், வழக்கு விவகாரங்களுக்குள் செல்லாமல், இந்தப் படம்எடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் நீதிமன்றச் சிக்கல்கள் வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என ரெட்டி தரப்பு தெரிவிக்கிறது.

இதற்கிடையே நடிகை விஜயசாந்தி, சங்கராச்சாரியார்களை கைது செய்த விதம் முறையல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் விஜயசாந்தி. பாஜகவில் அங்கம் வகிக்கும் விஜயசாந்தி, அவரதுகட்சி ஜெயலலிதாவை எதிர்த்துக் கொண்டிருந்த போதே அவரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இவர் ஜெயேந்திரர் கைது விவகாரம் குறித்து கூறுகையில், சங்கராச்சாரியார்கள் மீது எடுத்த நடவடிக்கையை தவறு என்று பாரதியஜனதா கட்சி கூறவில்லை. ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்ட விதம், அவர்கள் நடத்தப்பட்ட விதம் ஆகியவைமுறையானதாக இல்லை.

அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.

இதற்கிடையே ரெட்டி எடுக்க உள்ள ஜெயேந்திரர் படத்துக்கு எதிராக அம்மா ஆதரவாளர்கள் ஒரு போட்டி படத்துக்கு பூஜைபோட்டாலும் போடலாம், சொல்ல முடியாது.

அப்படி பூஜை போட்டு, எஸ்வி சேகரை அதில் நடிக்கக் கூப்பிட்டால் நடிப்பாரோ?

Read more about: 4 languages, cinema, jeyandrar, produce

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil