»   »  தொடரும் ரெய்டு... ஜாஸ் சினிமாவில் இன்னிக்கு ஷோ இருக்கா?

தொடரும் ரெய்டு... ஜாஸ் சினிமாவில் இன்னிக்கு ஷோ இருக்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாஸ் சினிமா நிறுவனத்துக்கு சொந்தமான ஃபீனிக்ஸ் மால் லக்ஸ் அரங்குகளில் இன்றும் சோதனை தொடர்வதால், படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சசிகலா குடும்ப உறவினர்களின் அனைத்து வீடுகள், அலுவலகங்களில் நேற்றிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் இதுவரை என்ன கைப்பற்றினார்கள் என்றெல்லாம் எதையும் தெரிவிக்கவில்லை வருமான வரித்துறை அதிகாரிகள்.

லக்ஸ்

லக்ஸ்

சசிகலாவின் அண்ணி மகன் விவேக் நடத்தும் ஜாஸ் சினிமா நிறுவனத்திலும் சோதனை தொடர்கிறது. நேற்று தீவிர சோதனை நடந்ததால், ஜாஸ் சினிமாவுக்கு சொந்தமான வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் லக்ஸ் அரங்குகளில் படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மொத்தம் 11 திரையரங்குகளின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இரண்டாவது நாளாக

இரண்டாவது நாளாக

சோதனை இன்றும் தொடர்வதால், தொடர்ந்து காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. லக்ஸ் திரையரங்குகளில் ஓடும் படங்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுப்படங்கள்

புதுப்படங்கள்

நேற்றும் இன்றும் இப்படை வெல்லும், நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் அறம் ஆகிய படங்கள் வெளியாகின. இவை மூன்றுக்கும் லக்ஸ் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் தொடர் சோதனை காரணமாக இரண்டாவது நாளாக முடங்கியுள்ளன லக்ஸ் அரங்குகள்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

சினிமா அரங்குகளைப் பொறுத்தவரை ஒரு புதுப்படத்துக்கு முதல் மூன்று நாட்கள்தான் வசூலைக் குவிக்கும். குறிப்பாக லக்ஸ் அரங்குகள் சொகுசானவை. சுமாரான படங்களுக்கும் இங்கு கூட்டம் குவியும். ஆனால் வருமான வரித்துறையின் சோதனையால் லக்ஸுக்கு பெரும் அளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. நல்ல திரையரங்கில் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வரும் ரசிகர்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

English summary
Jazz cinema's Luxe Mall has been closed for the second day due to Income Tax raid

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X