twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கபாலி உரிமையை வாங்கியதா சசிகலாவின் ஜாஸ் சினிமா

    By Mayura Akilan
    |

    சென்னை: கபாலி திரைப்படத்தின் மொத்த தமிழகத் தியேட்டர் உரிமையையும் ஜாஸ் சினிமாஸ் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள சத்யம் சினிமாஸின் 11 திரையரங்குகளை ஜாஸ் சினிமாஸ் வாங்கியதாக கடந்த ஆண்டு சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், திரையரங்குகளை யாரும் விலைக்கு வாங்கவில்லை, வாடகைக்கே விடப்பட்டுள்ளது என பீனிக்ஸ் மால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு உலகமே எதிர்பார்க்கும் படம் கபாலி. ரஜினி நடித்துள்ள கபாலி திரைப்படத்தைப் பற்றி தினசரி தினுசு தினுசாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

    கபாலி படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை பல கோடி கொடுத்து ஜாஸ் சினிமாஸ் வாங்கியுள்ளதாக தற்போது கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கபாலி விநியோக உரிமை

    கபாலி விநியோக உரிமை

    கபாலி படம் சென்சாருக்கு சென்று வந்த பின்னர்தான் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்த முடியும் என்று தயாரிப்பாளர் தாணு சொன்னாலும், ஜுலை 15ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. அதன்படி கபாலி விநியோக உரிமையும் களை கட்டி வருகிறது.

    ரூ.200 கோடி வியாபாரம்

    ரூ.200 கோடி வியாபாரம்

    பட விநியோகம், ஒளிபரப்பு உரிமம், தியேட்டர் மற்றும் டப்பிங் உரிமைகளே பல கோடி ரூபாய்க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் ரிலீஸ் ஆகும் முன்பே, சுமார் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வெளி மாநில ரிலீஸ்

    வெளி மாநில ரிலீஸ்

    கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களும் அவர்கள் மொழியில் இப்படத்தை வெளியிட மலைக்க வைக்கும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக சினிமா துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வெளிநாடு ரிலீஸ்

    வெளிநாடு ரிலீஸ்

    இதே போல், தென் இந்தியாவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய பாலிவுட் விநியோகிஸ்தர்கள் பலரும் போட்டியிட்டு வருகின்றனர். உள்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் கபாலி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஃப்ரான்ஸ் மற்றும் சீனா சந்தைகளில் கபாலி படம் மிகப் பெரிய விலைக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    பலகோடி வியாபாரம்

    பலகோடி வியாபாரம்

    இதுவரை எந்த படத்திற்கு இவ்வளவு விலை கொடுக்கப்பட்டது இல்லையாம். இவையில்லாமல், இந்தியா முழுவதிலும் இப்படத்தை அதிக தியேட்டர்களில் திரையிடவுள்ளனர். இதனிடையில், மலாய் மொழியிலும் டப்பிங் செய்து மலேசியாவில் வெளியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து, சீன மொழியிலும் படத்தை டப்பிங் செய்யவுள்ளனர்.

    மலாய், சீனா

    மலாய், சீனா

    அண்மையில் பாகுபலி படம் சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், பாகுபலியை மிஞ்சும் வகையில் கபாலி, அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் ஆகும் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

    தமிழ்நாடு ரிலீஸ்

    தமிழ்நாடு ரிலீஸ்

    இதனிடையே ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்தான் கபாலி தமிழக உரிமையை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கபாலி குறைந்தது 600 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

    வேதாளம் பாணியில்

    வேதாளம் பாணியில்

    கடந்த வருடம் வெளிவந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படம் வேதாளம். இப்படத்தை தமிழகம் முழுவதும் ஜாஸ் சினிமாஸ் வெளியிட்டது.
    வேதாளம் கிட்டத்தட்ட 500 திரையரங்குகளுக்கு மேல் இந்நிறுவனம் வெளியிட்டது.

    ஜெயாடிவியில் கபாலி

    ஜெயாடிவியில் கபாலி

    வேதாளம் படத்தில் சேட்டிலைட் உரிமை, லிங்கா, கத்தி ஆகிய படங்களின் உரிமையை ஜெயாடிவிதான் கைப்பற்றியது. அதேபோல கபாலி படத்தின் சேட்டிலைட் உரிமையும் ஜெயாடிவியே வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Reliable sources reveal that Chennai based distributor Jazz Cinemas has acquired the entire Tamil Nadu Theatrical release rights of 'Kabali' by paying a whopping amount. It is also said that the theatrical release date has been confirmed as July 15,2016.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X