»   »  46 வயதில் நடிகையை மணந்த நடிகர் ஜே.டி சக்கரவர்த்தி

46 வயதில் நடிகையை மணந்த நடிகர் ஜே.டி சக்கரவர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தன்னுடைய பேச்சுலர் வாழக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து 46 வயதில் நடிகர் ஜே.டி சக்கரவர்த்தி திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1989வது வருடம் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் தெலுங்கு படமான சிவா மூலம் நடிகராக அறிமுகமானவர் சக்கரவர்த்தி. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

JD Chakravarthy marries Anu Krithi Sharma

தமிழில் அர்ஜூன் நடித்த பிரதாரப் படம் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த சத்யா படத்திற்காக விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால், சர்வம், கச்சேரி ஆரம்பம், சமர், அரிமா நம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுநாள் வரை பேச்சலராக இருந்த சக்கரவர்த்தி தன்னுடைய 46வது வயதில் அனுகிரித்தி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் இயக்கிய ஸ்ரீதேவி படத்தில் கதாநாயகியாக அனுகிரித்தி நடித்துள்ளார்.

நேற்றைய தினம் தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜே.டி.சக்கரவர்த்தி.

English summary
JD Chakravarthy has bid goodbye to bachelorhood at the age of 46. He married actress Anu Krithi Sharma in a low-key event in Hyderabad on Friday, Aug. 18

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil