»   »  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசைப்பட்ட நடிகர் கார் விபத்தில் பலி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசைப்பட்ட நடிகர் கார் விபத்தில் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கார் விபத்தில் பலியான டிவி நடிகர் ஜீவன் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு கலந்து கொள்ள ஆசைப்பட்டாராம்.

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ரச்சனா, நடிகர் ஜீவன் ஆகியோர் பெங்களூர் அருகே நடந்த கார் விபத்தில் பரிதாபமாக பலியாகினர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த 5 நடிகர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜீவன்

ஜீவன்

100 படங்களுக்கு மேல் துணை நடிகராக நடித்த ஜீவன் இந்த ஆண்டு கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டாராம். இந்நிலையில் அவர் பலியாகிவிட்டார்.

ரச்சனா

ரச்சனா

கன்னட தொலைக்காட்சி தொடர்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் ரச்சனா. வியாழக்கிழமை மாலை ஷூட்டிங் இருந்ததால் புதன்கிழமை இரவே தனது நண்பர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

பலி

பலி

ஷூட்டிங்கை மிஸ் பண்ணக் கூடாது என்று இரவோடு இரவாக கோவிலுக்கு சென்ற வழியில் விபத்தில் சிக்கி பலியானார் ரச்சனா. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

தூக்கம்

தூக்கம்

காரை ஓட்டியது ஜீவன் தான். ஜீவன் தூக்க கலக்கத்தில் காரை சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் மீது மோதியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜீவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கிறார் ரச்சனா.

இரங்கல்

இரங்கல்

ஜீவன், ரச்சனா பலியான சம்பவம் குறித்து அறிந்த கன்னட திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். ஜீவன் பல படங்களில் நடித்திருந்தாலும் ரச்சனா தான் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார்.

English summary
Television actor Jeevan who got killed in a road accident wanted to participate in Kannada Big boss show this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil