»   »  அண்ணாத்தே, கபாலிக்கு வில்லன் ஜெட்லி இல்லீங்கோ... மறுக்கிறார் ரஞ்சித்

அண்ணாத்தே, கபாலிக்கு வில்லன் ஜெட்லி இல்லீங்கோ... மறுக்கிறார் ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஜெட்லி நடிப்பதாக வெளியான தகவலை இயக்குநர் ரஞ்சித் மறுத்துள்ளார்.

அட்டக்கத்தி, மெட்ராஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ரஞ்சித், தற்போது ரஜினி நடிப்பில் கபாலி படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ரஜினி ஜோடியாக ராதிகா ஆப்தேவும், மகளாக தன்ஷிகாவும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர கலையரசன், தினேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இப்படத்தை வரும் தமிழ்ப் புத்தாண்டிற்கு (ஏப்ரல் 14) ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.


படப்பிடிப்பு...

படப்பிடிப்பு...

சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றது. பின்னர் பாங்காங்கிலும், அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.


2.0...

2.0...

இதற்கிடையே ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் எந்திரனின் இரண்டாவது பாகமாக ‘2.0' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டார். தற்போது மீண்டும் கபாலி படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


ஜெட்லீ...

ஜெட்லீ...

இந்நிலையில், கபாலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல சீன நடிகர் ஜெட்லீ நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. காரணம் கதைப்படி ரஜினிக்கு வெளிநாட்டு வில்லன் ஒருவர் இருக்கிறார். எனவே, அந்த கதாபாத்திரத்தில் ஜெட்லீ நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.


உண்மையில்லை...

உண்மையில்லை...

இது தொடர்பாக டிவிட்டர் தளத்தில் இயக்குநர் ரஞ்சித்திடன் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள ரஞ்சித், "மன்னிக்கவும். இச்செய்தியில் உண்மையில் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.


மலேசிய நடிகர்கள்...

மலேசிய நடிகர்கள்...

இது தவிர மலேசிய நடிகர்களான நார்மன் ஹாகிம், டாடுக் ரோசியம் மற்றும் ஜாக் தைபான் ஆகியோருடன் 'கபாலி' படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


English summary
Contrary to reports, Chinese action star Jet Li has not been roped in for superstar Rajinikanth's Tamil gangster drama 'Kabali'. The movie is on the verge of completion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil