»   »  தனி ஒருவன் ஹிந்தி ரீமேக்: குட் பாயாக சல்மான்... பேட் பாயாக அபிஷேக் பச்சன்

தனி ஒருவன் ஹிந்தி ரீமேக்: குட் பாயாக சல்மான்... பேட் பாயாக அபிஷேக் பச்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜெயம் ரவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தனி ஒருவன் திரைப்படத்தை ஹிந்தி மொழியில் ரீமேக்க இருக்கின்றனர்.

ஜெயம் ரவி வேடத்தில் சல்மான் கானும், அரவிந்த் சாமி வேடத்தில் அபிஷேக் பச்சனும் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனி ஒருவனால் கவரப்பட்ட சல்மான் விரைவில் படத்தைப் பார்வையிட தீர்மானித்து இருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

எனவே படம் கண்டிப்பாக ஹிந்தி பேசும் என்று தமிழ்த் திரையுலகினர் அடித்துக் கூறுகின்றனர், ஹிந்தி தவிர வேறு எந்த மொழிகளில் தனி ஒருவன் ரீமேக்காக இருக்கிறது என்று பார்க்கலாம்.

தனி ஒருவன்

தனி ஒருவன்

ஜெயம் ரவி- நயன்தாரா - அரவிந்த் சாமி கூட்டணியில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல ஆக்க்ஷன் படம் என்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு சான்றிதழ் அளித்திருக்கின்றனர்.

ரசிகர்களின் ஆராவாரமான வரவேற்பில்

ரசிகர்களின் ஆராவாரமான வரவேற்பில்

தனி ஒருவன் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு கொடுத்த நற்சான்றிதழ் காரணமாக படம் வசூலில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இது வரை சுமார் 13 கோடிகளுக்கும் சற்று அதிகமாக படம் வசூலித்திருக்கிறது என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சல்மான் கான்

சல்மான் கான்

தனி ஒருவன் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட சல்மான் கான் இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வம் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் படத்தை விரைவில் பார்க்க சல்மான் உத்தேசித்து இருக்கிறாராம்.

சல்மான் - அபிஷேக் பச்சன்

சல்மான் - அபிஷேக் பச்சன்

ஜெயம் ரவி வேடத்தில் சல்மான் கானும், அரவிந்த் சாமியாக அபிஷேக் பச்சனும் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக உறுதியற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரீமேக் புதிதல்ல

ரீமேக் புதிதல்ல

சல்மானிற்கு ரீமேக் படங்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி அதுவும் சமீப கால அவரின் ஹிட் படங்கள் தென்னிந்தியப் படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ்பாபு தொடங்கி திலீப் படங்கள் வரை

மகேஷ்பாபு தொடங்கி திலீப் படங்கள் வரை

தெலுங்கில் மகேஷ்பாபுவின் போக்கிரி, ரவி தேஜாவின் கிக், ரெடி மற்றும் மலையாளத்தில் திலீப் நடித்த பாடிகார்ட் போன்ற படங்களின் ரீமேக்கில் சல்மான் நடித்திருக்கிறார். இந்தப் படங்கள் அனைத்துமே ஹிந்தியில் பிளாக்பஸ்டர் என்ற அந்தஸ்தை எட்டின.

முதல் முறையாக தமிழ்

முதல் முறையாக தமிழ்

சல்மான் தனது திரையுலக வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு தமிழ்ப் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு மொழியிலும்

தெலுங்கு மொழியிலும்

தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கு மொழியிலும் விரைவில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது, இதற்காக தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

ஓவர்நைட்டில் முன்னணி நடிகராக

ஓவர்நைட்டில் முன்னணி நடிகராக

தனி ஒருவன் படத்தின் மூலம் இழந்த மார்க்கெட்டை பெற்று மீண்டும் முன்னணி நடிகராக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி, தற்போது படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு பேசவிருப்பதால் மனிதர் உற்சாகத்துடன் காணப்படுகிறார்.

ட்ரெண்டான மிருதன்

ட்ரெண்டான மிருதன்

தனி ஒருவன் மூலம் பார்முக்கு வந்த ஜெயம் ரவி தற்போது லட்சுமி மேனனுடன் ஒரு புதிய படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சற்று நேரத்திற்கு முன்பு படத்தின் தலைப்பு மிருதன் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இந்திய அளவில் டைட்டிலை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி கொண்டாடி மகிழ்ந்தனர் ரசிகர்கள்.

ஜெயம் ரவி காட்டில அடைமழை பொழியுது போல...

English summary
Jeyam Ravi's Thani Oruvan to be Remade in Hindi and Telugu Languages.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil