»   »  ஸ்ரீதேவி இறந்து ஒரு மாதம் கூட ஆகல அதற்குள் பர்த்டே பார்ட்டியா?: ஜான்வியை திட்டிய நெட்டிசன்ஸ்

ஸ்ரீதேவி இறந்து ஒரு மாதம் கூட ஆகல அதற்குள் பர்த்டே பார்ட்டியா?: ஜான்வியை திட்டிய நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சர்ச்சை கிளப்பும் ஸ்ரீதேவியின் மகள்!- வீடியோ

மும்பை: ஜான்வி கபூரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் சிலர் அவரை வசை பாடியுள்ளனர்.

ஜான்வி கபூர் நேற்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது அம்மா ஸ்ரீதேவி இல்லாமல் முதல் பிறந்தநாளை கொண்டாடினார். அம்மா செல்லமான அவரின் முகத்தில் சிரிப்பை பார்க்க குடும்பத்தார் சேர்ந்து சர்பிரைஸுக்கு ஏற்பாடு செய்தனர்.

போனி கபூர், அவரின் தம்பிகளான அர்ஜுன், சஞ்சய் ஆகியோரின் குடும்பத்தார் ஒன்று சேர்ந்து ஜான்விக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

நள்ளிரவு 12 மணிக்கு டேபிள் நிறைய கேக்குகளாக வைத்து ஜான்விக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். அந்த புகைப்படத்தை ஜான்வியின் சித்தப்பா மகளான நடிகை சோனம் கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் எப்படி சிரித்து ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடுகிறார் ஜான்வி. யார் செத்தால் என்ன இவர்களுக்கு பார்ட்டி பண்ண வேண்டும் என்று நெட்டிசன்கள் சிலர் அவரை திட்டியுள்ளனர்.

திட்டு

திட்டு

புகைப்படத்தில் மகிழ்ச்சியாக காணப்படும் ஜான்வியை பார்த்து திட்டுபவர்கள் திட்டினாலும் அவரை ஆதரிக்கவும் ஆட்கள் உள்ளனர். தாயை இழந்து தவிக்கும் ஜான்வியின் முகத்தில் சிரிப்பை பார்க்க குடும்பத்தார் இப்படி செய்ததில் தவறு இல்லை என்று சிலர் ஆதரித்துள்ளனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஜான்வி சிரித்த முகமாக இருப்பதை தான் ஸ்ரீதேவியே விரும்புவார். அந்த பெண் இந்த சோகத்திலும் சிரிப்பதை பார்த்து பாராட்டுவதை விட்டுவிட்டு குறை சொல்ல வேண்டாம் என்று சில நல் உள்ளங்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.

English summary
It's known to all that Janhvi is going through the most difficult phase of her life as she has recently, lost her mother, Sridevi. But it's really shocking to see that the young girl is being slammed by the netizens, for celebrating her birthday!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil