»   »  நடிக்கத் துடிக்கும் ஜான்வி: கட்டிக் கொடுக்க விரும்பும் அம்மா ஸ்ரீதேவி

நடிக்கத் துடிக்கும் ஜான்வி: கட்டிக் கொடுக்க விரும்பும் அம்மா ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒரு தாயாக தனது மகளுக்கு திருமணம் செய்து பார்க்கவே ஆசைப்படுவதாக பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் வாரிசுகள் நடிக்க வருவது அதிகரித்து வருகிறது. நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நடிகராகியுள்ளார். நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா கேதர்நாத் படம் மூலம் நடிகையாகியுள்ளார்.

அடுத்து ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாவதை தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் தனது மகள்கள் பற்றி ஸ்ரீதேவி கூறியதாவது,

மகள்கள்

மகள்கள்

என் மகள்கள் வளர்ந்துவிட்டாலும் எனக்கு அவர்கள் எப்பொழுதுமே குழந்தைகள் தான். நாங்கள் தோழிகளை போன்று பழகுவோம். நிறைய நேரம் ஒன்றாக செலவிடுவோம். நான் தற்போது படத்தில் பிசியாக இருப்பதால் பெரும்பாலும் லேட்டாக வீட்டுக்கு வருகிறேன்.

குஷி

குஷி

நான் எவ்வளவு லேட்டாக வீட்டிற்கு வந்தாலும் என் மகள் குஷி என்னை புன்னகையுடன் வரவேற்பாள். பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து படம் பார்ப்போம்.

ஜான்வி

ஜான்வி

முன்பு நான் என் மகள்களை பார்ட்டிகள் மற்றும் பட ப்ரீமியர்களுக்கு அழைத்துச் சென்றேன். அதற்கு நான் ஜான்விக்கு விளம்பரம் தேட அவ்வாறு செய்ததாக பலர் தவறாக புரிந்து கொண்டனர்.

பெருமை

பெருமை

எங்கு சென்றாலும் மகள்களை அழைத்துச் செல்வது ஒரு தாயாக எனக்கு பெருமையாக உள்ளது. ஆனால் உலகத்தார் என்னை தவறாக புரிந்து கொண்டனர்.

திருமணம்

திருமணம்

என் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதே ஒரு தாயாக எனக்கு மகிழ்ச்சி. ஆனால் அவள் நடிகையாகி வெற்றி அடைந்தால் நான் பெருமைப்படுவேன். அவளின் சந்தோஷமே எனக்கு முக்கியம் என்றார் ஸ்ரீதேவி.

English summary
Now all eyes are set on Sridevi's daughter Jhanvi Kapoor who is said to be harbouring starry dreams too! But it looks like Sridevi has some other plansin store for her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil