»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை ஜோதிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று புகார் எழுந்ததையடுத்து விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன்நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜன், நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நான் பல்லாண்டுகளாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். சினிமாத்துறையில் படத் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் பொறுப்பேற்றுவருகிறேன்.

சமீபத்தில் டிவி பேட்டி ஒன்றில், திரைப்பட தயாரிப்புச் செலவுகளைக் குறைப்பதற்கான வழிகளைத் தெரிவித்தேன். அப்போது பேட்டி எடுத்த மாலன், நடிகைகளின்சம்பளத்தை மட்டும் குறைக்க வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள் என்றார்.

அதற்குப் பதில் கூறுகையில், தமிழகத்தில் நடிகர்களை வைத்தே சில திரைப்படங்கள் விலைபோகின்றன என்று கூறி, நடிகைகளை மையமாக வைத்துஎடுக்கப்பட்ட படங்கள் விலைபோகவில்லை என்றேன். அதற்கு உதாரணமாக ஜோதிகா நடித்த சில திரைப்படங்களையும் கூறினேன்.

என் மீது குற்றம் இருந்தால், நடிகர் சங்க உறுப்பினர்கள் என்னிடம் நேரடியாக விளக்கம் கேட்டிருக்கலாம். அல்லது டிவி பேட்டியின் கேசட்டைப் போட்டுப்பார்த்து தவறு இருந்தால் விளக்கம் கேட்டிருக்கலாம்.

அதை விட்டுவிட்டு நடிகர், நடிகைகளை அவதூறாகப் பேசினேன் என்று கூறி, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி பத்திரிக்கைகளுக்குக் கொடுத்து என்னைஅவமானப்படுத்தி விட்டார்கள்.

சினிமா தொழில் வளர வேண்டும் என்று நினைக்கும் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள். அதுமட்டுமன்றி நடிகை ஜோதிகா வீட்டுக்குப் போன்செய்து அவரைக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் சங்க நிர்வாகிகள் சிலர் பொயப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

தீர விசாரிக்காமல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமன்றி, நடிகை ஜோதிகாவைக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக பொய்ப்பிரச்சாரம் செய்வதால் நான், நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் ராஜா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil