»   »  உருவாகிறது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2... வில்லனாக ராகவா லாரன்ஸ்?

உருவாகிறது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2... வில்லனாக ராகவா லாரன்ஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியாகி அனைவரையும் மிரட்டிய ஜிகர்தண்டா பார்ட் 2வில் வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பல நட்சத்திரங்களின் பங்களிப்பில் வெளியான படம் ஜிகர்தண்டா.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. மேலும் அந்த ஆண்டின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றாகவும் மாறியது.

Jigarthanda 2 Raghava Lawrence Play as a Villain?

இந்நிலையில் இப்படத்தின் 2 வது பாகத்தினை கார்த்திக் சுப்புராஜ் விரைவில் எடுக்கப் போவதாகவும் இதில் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து விசாரித்ததில் இந்தப் படத்தின் ஒருவரிக் கதையை லாரன்ஸிடம், கார்த்திக் சுப்புராஜ் கூறி அதில் வில்லனாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.

ஒருவரிக் கதையை கேட்ட லாரன்ஸ் படத்தின் முழுக்கதையையும் கேட்டுவிட்டு முடிவு செய்வதாக கூறியிருக்கிறாராம். இதனால் மொத்தக் கதையையும் உருவாக்கும் முயற்சியில் கார்த்திக் சுப்புராஜ் களமிறங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

ஜிகர்தண்டாவில் பாபி சிம்ஹா நடித்த கதாபாத்திரம் போன்று இப்படத்தின் கதையையும் கார்த்திக் சுப்புராஜ் வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் போகிறாராம்.

இதனால் ராகவா லாரன்ஸ் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

ராகவா லாரன்ஸ் தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வருகிறார். லாரன்ஸின் அடுத்த படமான நாகா படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் முதல் தொடங்கப்படவிருக்கிறது.

English summary
Sources Said Raghava Lawrence to Play as a Villain in Karthik Subbaraj's Jigarthanda 2.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil