»   »  அஜய் தேவ்கன் தயாரிப்பில் இந்தியில் ரீமேக் ஆகும் 'ஜிகர்தண்டா'!

அஜய் தேவ்கன் தயாரிப்பில் இந்தியில் ரீமேக் ஆகும் 'ஜிகர்தண்டா'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் ஜிகர்தண்டா. இந்தப் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் பின்பு பெரிய அளவில் கவனிக்கப்பட்டார்.

மதுரையை கதைப் பின்னணியாகக் கொண்டு வித்தியாசமான திரைக்கதையை அமைத்து கவனம் ஈர்த்தார் கார்த்திக் சுப்புராஜ். கல்ட் வரிசைப் படங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தது 'ஜிகர்தண்டா'.

Jigarthanda film is remaking in hindi

இந்தப் படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது 'ஜிகர்தண்டா' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. ஃபர்ஹான் அக்தர் சித்தார்த் நடித்த வேடத்திலும், பாபி சிம்ஹா நடித்த வேடத்தில் சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

ஜிகர்தண்டா இந்தி ரீமேக் படத்தை பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் தயாரிக்க உள்ளார். நிஷிகந்த் காமத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாம்.

English summary
Bobby Simha, Siddharth plays lead roles in 'Jigarthanda' movie in tamil. 'Jigarthanda' directed by Karthik subbaraj is currently remake in Hindi. In the role of Siddharth, farhan Akhtar and Sanjay Dutt play the role of Bobby Simha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil