twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜிகர்தண்டா வில்லனின் பேவரைட் டோரா... சோட்டா பீம்

    By Mayura Akilan
    |

    ஜிகர்தண்டா படத்தில் வில்லன் வேடத்தில் கெத்து காட்டி ரசிகர்களைக் கவர்ந்த சிம்ஹாவிற்கு கார்ட்டூன் சேனலில் சோட்டா பீம் பார்ப்பதுதான் பிடித்தமான விசயமாம்.

    குறும்படத்தில் ஆரம்பித்து இன்று வெள்ளித்திரையில் உயரம் தொட்டுள்ளார் சிம்ஹா. பிரகாஷ்ராஜ் ஹிந்தி படத்திலும் நாசர் தெலுங்கு படத்திலும் பிஸியாக இருப்பதால் தற்போது வில்லன், குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு சிம்ஹா தான் சரியான ஆள் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

    இப்போது உறுமீன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி விட்டார். ஆனாலும் வீட்டில் பச்சைப் புள்ளையாட்டம் கார்டூன் சேனல்தான் பார்ப்பாராம்.

    சிம்ஹாவுக்கு திருப்புமுனை

    சிம்ஹாவுக்கு திருப்புமுனை

    பீட்சா', ‘நேரம்', ‘சூது கவ்வும்', ‘ஜிகர்தண்டா' என சிம்ஹாவுக்கு அமைந்த படங்கள் எல்லாமே ஒவ்வொரு வகையில் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது. ‘ஜிகர்தண்டா' இவருக்குத் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. இதற்கு காரணம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்தான் என்கிறார்.

    ஆனந்தக் கண்ணீர்

    ஆனந்தக் கண்ணீர்

    ‘ஜிகர்தண்டா' படத்தில் இடைவேளைக்குப் பிறகு ஒரு தியேட்டருக்குள் கண்ணீரோடு நடந்து போவேன். அது மாதிரி இப்போ நிஜத்தில் ஒவ்வொரு திரையரங்குக்கும் போயிட்டு இருக்கேன்.

    இஷ்டப்பட்டு நடித்த படம்

    இஷ்டப்பட்டு நடித்த படம்

    நான் ரொம்ப கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு பண்ணிய படம் ‘ஜிகர்தண்டா'. இனி சேதுவை முறியடிக்கிற மாதிரி ஒரு பாத்திரம் கிடைக்குமான்னு தெரியல. என்னை முழுக்க சேதுவாக மாத்தினான் கார்த்திக். அவனுக்கு என்னோட நன்றியை எப்படிச் சொல்லப் போறேன்னு தெரியல.

    சித்தார்த்துக்கு நன்றி

    சித்தார்த்துக்கு நன்றி

    நான் இரண்டாவது நன்றி கூறுவது சித்தார்த்துக்கு. ஏன்னா, உடன் நடிக்கும் ஒரு நடிகருக்கு இவ்வளவு பெரிய இடத்தைக் கொடுக்க ஒரு முன்னணி நடிகருக்கு எப்படி மனசு வரும்? அந்த மனசு சித்தார்த்திடம் இருக்கிறது. என்னை மாதிரி நடிகர்கள் எல்லாம் சித்தார்த் கூட ஒரு படமாவது நடிச்சிரணும்.

    அப்பா பேரை காப்பாத்தணும்

    அப்பா பேரை காப்பாத்தணும்

    எங்கப்பா போய்ப் படம் பார்த்துட்டு என்னோட நண்பன் கிட்ட, ‘அவன் சென்னைக்குப் போய் உருப்படாமல் போகப் போறான்னு நினைச்சுட்டு இருந்தேன். அவனோட வாழ்க்கையை நினைச்சு எனக்கு ஒரு பயம் இருந்துச்சு. இப்போ ‘ஜிகர்தண்டா' பார்த்த உடனே எனக்கு அந்தப் பயம் போயிடுச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்'ன்னு சொல்லிருக்கார். அவரோட வார்த்தையைக் கண்டிப்பா நான் காப்பாத்துவேன்.

    கதைதான் ஹீரோ

    கதைதான் ஹீரோ

    என்னைப் பொறுத்த வரை கதைதான் ஹீரோ. அந்தக் கதைக்கு என்ன தேவையோ அது காமெடியா, ஹீரோவா, வில்லனா எதுவானாலும் இந்த சிம்ஹா தயாரா இருப்பான் என்கிறார் இந்த புது வில்லன்.

    English summary
    Jigarthanda villain Sihma is a really cool guy in reality. He likes cartoon movies, especially Dora Bujjy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X