»   »  பா. ரஞ்சித் படத்தில் நடிக்கும் மோடியின் 'சிம்ம சொப்பனம்' ஜிக்னேஷ் மேவானி

பா. ரஞ்சித் படத்தில் நடிக்கும் மோடியின் 'சிம்ம சொப்பனம்' ஜிக்னேஷ் மேவானி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பா. ரஞ்சித்தின் படத்தில் நடிக்க உள்ளார் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி.

ஒரு எம்.எல்.ஏ. படத்தில் நடிப்பது பெரிய விஷயமா என்று கேட்டால் இல்லை ஆனால் ஜிக்னேஷ் மேவானி நடிப்பது நிச்சயம் பெரிய விஷயம். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அவர் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய இளைஞர் தான் இந்த ஜிக்னேஷ் மேவானி.

அப்படிப்பட்டவர் தமிழ் படத்தில் நடிக்கிறார்.

ஜிக்னேஷ்

ஜிக்னேஷ்

பா. ரஞ்சித் தற்போது காலா படத்தில் பிசியாக உள்ளார். இந்த படத்தை அடுத்து அவர் இயக்க உள்ள படத்தில் குஜராத் மாநிலத்தில் தலித்துகளுக்காக போராடும் ஜிக்னேஷ் மேவானி நடிக்கிறார்.

கோலிவுட்

கோலிவுட்

ஜிக்னேஷ் மேவானி ரஞ்சித்தின் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார். ஜிக்னேஷ் அண்மையில் சென்னைக்கு வந்தபோது ரஞ்சித்தை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

குஜராத்தில் மோடிக்கு சிம்ப சொப்பனமாக இருந்த ஜிக்னேஷ் தமிழ் படத்தில் நடிக்கவிருப்பது கோலிவுட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. படத்தை துவங்கும் முன்பே அது குறித்து ரசிகர்களிடையே ஆவல் ஏற்பட்டுள்ளது.

மோடி

மோடி

குஜராத் சட்டசபை தேர்தலில் வட்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் ஜிக்னேஷ் மேவானி. அந்த தொகுதியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jignesh Mewani, an independent MLA from Gujarat is going to act in Pa. Ranjith's upcoming movie. Jignesh Mewani was the one who gave PM Modi sleepless nights during the Gujarat assembly elections.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil