»   »  ஜீவா கழுத்தில் கைபோட்ட சிம்பன்ஸி குரங்கு.. தாய்லாந்து ஷூட்டிங் ஓவர்!

ஜீவா கழுத்தில் கைபோட்ட சிம்பன்ஸி குரங்கு.. தாய்லாந்து ஷூட்டிங் ஓவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தாய்லாந்தில் சிம்பான்சியுடன் இணைந்த ஜீவா- வீடியோ

சென்னை : டான் சாண்டி இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையமைப்பில் ஜீவா, ஷாலினி பான்டே மற்றும் பலர் நடிக்கும் படம் 'கொரில்லா'.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கொரில்லா குரங்கு ஒன்று படத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரியும்.

'கொரில்லா' படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்ற படக்குழுவினர் அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார்கள்.

கொரில்லா

கொரில்லா

ஜீவா நடிக்கும் 29-வது படம் 'கொரில்லா'. ஜீவா ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார். 'மகாபலிபுரம்' படத்தை இயக்கிய டான் சாண்டி இந்தப் படத்தை இயக்குகிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார்.

சிம்பன்ஸி

சிம்பன்ஸி

தமிழில் மிருகங்களை வைத்து படங்கள் வருவது வெகுவாகக் குறைந்துவிட்ட சமயத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கொரில்லாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். தாய்லாந்தில் உள்ள புகழ்பெற்ற 'சாமுட்' விலங்குகள் பயிற்சி மையத்தில் இருந்து சிம்பன்சி நடிக்கிறது.

ஷூட்டிங் ஓவர்

ஷூட்டிங் ஓவர்

'கொரில்லா' படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்ற படக்குழுவினர் அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார்கள். இந்தியா வந்ததும், சென்னையில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம்.

வித் கொரில்லா

வித் கொரில்லா

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கொரில்லாவுடன் ஜீவா, சதீஷ் ஆகியோர் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தாய்லாந்து படப்பிடிப்பு பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் ஹீரோ ஜீவா.

English summary
Jiiva, Shalini pandey and many others starred in the film 'Gorilla'. The guerrilla monkey is acting in the lead role in the film. Crew have completed the second schedule shooting of 'Gorilla' in Thailand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil