»   »  அட்லீ-ஜீவாவின் 'சங்கிலி புங்கிலி கதவைத் தொற'

அட்லீ-ஜீவாவின் 'சங்கிலி புங்கிலி கதவைத் தொற'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ தயாரிப்பில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு 'சங்கிலி புங்கிலி கதவைத் தொற' என்று வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கின்றனர்.

சங்கிலி புங்கிலி கதவைத் தொற என்று காஞ்சனா படத்தில், ராகவா லாரன்ஸ் ஆடிப்பாடிய வரிகளை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துவிட்டனர்.

தெறி படத்தில் பிஸியாக இருக்கும் அட்லீ 'அபோர்ஆப்பிள்' என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறார்.

இந்த நிறுவனம் சார்பாக அட்லீ தயாரிக்கும் புதிய படத்திற்கு சங்கிலி புங்கிலி கதவைத் தொற என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

புதுமுக இயக்குநர் ஐகே இயக்கும் இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து ஸ்ரீதிவ்யா, சூரி, இளவரசு ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது பழனி பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

'ஜில் ஜங் ஜக்' புகழ் விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்க, டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.

திகில் கலந்த காமெடியாக உருவாகும் இப்படத்தை அட்லீயுடன் இணைந்து, பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது.

English summary
Jiiva's Next Movie Title Sangili Bunjili Kadhava Thora. Director Atlee Tweeted "Its #SangiliBungiliKathavaThorae!My Maiden production #aforapple with foxstarhindi".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil