»   »  ஏலத்திற்கு வருகிறது 'ஜில் ஜங் ஜக்' திரைப்பட புகழ் கார்.. ஆரம்ப விலை ரூ.1.20 லட்சம்

ஏலத்திற்கு வருகிறது 'ஜில் ஜங் ஜக்' திரைப்பட புகழ் கார்.. ஆரம்ப விலை ரூ.1.20 லட்சம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்தார்த் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ஜில் ஜங் ஜக் படத்தின் பிங்க் நிற கார் விற்பனைக்கு வந்துள்ளது.

சித்தார்த், ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் கதாநாயகி இல்லாமல், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜில் ஜங் ஜக். ஹீரோயின் இல்லாத இப்படத்தில் ஒரு பிங்க் நிற கார் முக்கிய பங்கை வகித்தது.


படத்தின் மொத்தக் கதையும் இந்தக் காரை சுற்றித் தான் நகரும். மேலும் வித்தியாசமான கலரில் இருந்த அந்தக் கார் ரசிகர்கள் பலருக்கும் பிடித்துப் போனது.


Jil Jung Juk Fame Pink Car Sale

படத்தில் இடம்பெற்ற இந்தக் காரானது பலரையும் கவர்ந்த நிலையில், அந்தக் காரை விற்பனை செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது.


1980 ஆம் ஆண்டு மாடலான இந்த காரின் விலை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரின் விலை மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இந்த காரை வாங்க பலரும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தீரஜ் வைத்தி இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையில் வெளியான இப்படத்தை நடிகர் சித்தார்த் சொந்தமாக தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Siddharth Starring Jil Jung Juk Fame Pink Car now for Sale in Market.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil