»   »  ஜில் ஜங் ஜக்: ஹீரோயின் இல்லாத குறையே தெரியலையே...சித்தார்த்தைப் புகழும் ரசிகர்கள்

ஜில் ஜங் ஜக்: ஹீரோயின் இல்லாத குறையே தெரியலையே...சித்தார்த்தைப் புகழும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்தார்த், சனத் ரெட்டி, அவினாஷ், ராதாரவி, நாசர், மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் ஜில் ஜங் ஜக்.

அறிமுக இயக்குநர் தீரஜ் வைத்தி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஜில் ஜங் ஜக் என்று பெண்களைக் குறிக்கும் வார்த்தையை வைத்துவிட்டு ஹீரோயினே இல்லாமல் இப்படத்தை தைரியமாக எடுத்திருக்கின்றனர்.

அனிருத் குரலில் வெளியான 'ஷூட் தி குருவி' பாடல் இளசுகளிடம் எக்கச்சக்க வரவேற்பைப் பெற்றது. அதே போல படத்திற்கும் வரவேற்பு கிடைத்ததா? பார்க்கலாம்.

டேய் உஜாலா மண்ட

"ஜில் ஜங் ஜக் முதல் பாதி களிப்பாக உள்ளது. டேய் உஜாலா மண்ட இங்க வா... என்று சித்தார்த்தைக் கலாய்க்கும் இடம் சூப்பர். ஜில்லுக்கு ஜங், ஜக் இருவரும் நல்ல துணை நடிகர்களாக மாறியிருகின்றனர்" என்று மகிழ்ச்சியுடன் ட்வீட்டியிருக்கிறார் தூயவன்.

அற்புதமாக உள்ளது

"ஜில் ஜங் ஜக் அற்புதம். வசனங்கள் இதிகாச பாணியில் உள்ளது. சில சீரியஸ் காட்சிகளில் கர்நாடக இசையை கொடுத்திருப்பது அதிகபட்சம்" என்று பாராட்டி இருக்கிறார் என்டி.

பலமுறை பார்க்கலாம்

"ஜில் ஜங் ஜக் அற்புதமான படம். சித்தார்த் உங்கள் நடிப்பு ஆரம்பம் முதல் இறுதிவரை உலுக்கி விட்டது. நிறைய முறை இப்படத்தை பார்க்க வேண்டும் போல உள்ளது" என்று புகழ்ந்திருக்கிறார் சுனில் பிரேம்.

என்ன ஒரு படம்

"என்ன ஒரு பிரமாதமான படம். வேடிக்கையான நடிப்பு மற்றும் இசை. படத்தை நேசித்தேன்" என்று சித்தார்த் மற்றும் தீரஜ் வைத்தியை பாராட்டி இருக்கிறார் ரஞ்சிதா ரகு.

தல பெயரை

"ஜில் ஜங் ஜக் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தல பெயரை பயன்படுத்தி வந்திருக்கும் இன்னொரு படம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார் கார்த்தி.


மொத்தத்தில் ஜில் ஜங் ஜக் திரைப்படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Siddharth, Avinash, Sananth Reddy Starrer Jil Jung Juk Released Today Worldwide, Written& Directed by Deeraj Vaidy - Live Audience Response.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil