»   »  "ஜில் ஜங் ஜக்" டீசரை வெளியிடும் மான் கராத்தே ஜோடி

"ஜில் ஜங் ஜக்" டீசரை வெளியிடும் மான் கராத்தே ஜோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சித்தார்த் நடித்து அவரே தயாரித்து வரும் படம் ஜில்ஜங்ஜக். இந்தப் படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் - ஹன்சிகா ஜோடி வருகின்ற வெள்ளிகிழமை அன்று வெளியிடுகின்றனர்.

கன்னடத்தில் வெளியான லூசியா படத்தை தமிழில் தயாரித்த சித்தார்த் அடுத்ததாக ஜில்ஜங்ஜக் படத்தைத் தயாரித்து வருகிறார். சித்தார்த் நடிக்கும் இப்படத்தை தீரஜ் வைத்தி என்னும் அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.

Jil Jung Juk Teaser Launches

இந்தப் படத்தின் முதல் பார்வையை சமீபத்தில் சித்தார்த் வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து படத்தின் டீசரை நாளை வெளியிட சித்தார்த் தீர்மானித்து இருக்கிறார்.

இந்த டீசரை மான் கராத்தே படத்தில் ஜோடியாக நடித்த சிவகார்த்திகேயன் - ஹன்சிகா ஜோடி நாளை வெளியிடவிருக்கிறார்கள்.இதற்காகத் தனியாக நிகழ்ச்சி எதையும் நடத்தவில்லையாம் மாறாக ட்விட்டரில் இருவரும் இந்தப் படத்தின் டீசரை வெளியிடவிருக்கிறார்களாம்.

முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. விஷால் சந்திரசேகர் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து சனந் ரெட்டி, ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

English summary
Siddharth's Jil Jung Juk First Look Teaser Launched Tomorrow 6 Pm, Sivakarthikeyan - Hansika will be Released the Teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil