twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜில் ஜங் ஜக் ரிலீஸ் ஒத்திவைப்பு: சித்தார்த் அறிவிப்பு

    By Mayura Akilan
    |

    சென்னை: சித்தார்த் தயாரித்து நடித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' திரைப்படம் அடுத்தாண்டு தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

    'ஜில் ஜங் ஜக்' என்று பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்து, தயாரித்திருக்கிறார் சித்தார்த். முழுப் படப்பிடிப்பும் முடிந்து, தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தது. இப்படம் நாயகியே இல்லாமல் உருவாகும் 'டார்க்' காமெடி வகை படமாகும். இப்படத்தை தீரஜ் வைத்தி என்ற புதுமுக இயக்குநர் இயக்கி இருக்கிறார், விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

    JilJungJuk movie release is postponed

    செப்டம்பர் 14ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லரையும், அதனைத் தொடர்ந்து படத்தின் ஒவ்வொரு பாடலையும் இணையத்தில் வெளியிட்டார்கள். ஏற்கனவே டிசம்பர் 24ம் தேதி ஜில் ஜங் ஜக் வெளியாகும் என்று நடிகர் சித்தார்த் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், டெல்டா மாவட்ட மக்கள் சிரத்திற்கு ஆளாகியுள்ளனர். தென் மாவட்ட மக்களும் கனமழையால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    சித்தார்த், கார்த்தி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களும் தங்களின் படப்பிடிப்பு பணிகளை ஒத்திவைத்து விட்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர். மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க,

    புதுப்படங்களை ரிலீஸ் செய்வதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் பல்வேறு படங்கள் தங்களது வெளியீட்டை அடுத்தாண்டுக்கு மாற்றி இருக்கிறார்கள். இதில் 'ஜில் ஜங் ஜக்' படமும் அடங்கும்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள சித்தார்த், "'ஜில் ஜங் ஜக்' படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தாண்டு உங்களை திரையரங்கில் சந்திக்க மாட்டோம். முதலில் அனைவரும் நலம் பெறுவோம். அடுத்தாண்டு சந்திக்கிறோம் நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.

    English summary
    Actor Siddarath said his twitter JilJungJuk movie release is postponed. We will not be able to meet you in cinemas this year. Let's all get well first. See you next year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X