For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜில்லாவும் வீரமும் 100 நாள் தாண்டிடுச்சி; ஆபரேட்டருக்குதான் கண்ணு முழி பிதுங்கிடுச்சி!

  By Shankar
  |

  ஜில்லா மற்றும் வீரம்.. இரு படங்களுமே 100 நாட்கள் ஓடிவிட்டதாக இன்று விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

  இவற்றில் ஜில்லா படத்தின் நூறாவது நாள் விழா வேறு இன்று ஆல்பட் திரையரங்கில் நடக்கவிருக்கிறது.

  உண்மையாக ஓடினவா?

  உண்மையாக ஓடினவா?

  இந்தப் படங்கள் உண்மையிலேயே நூறு நாட்கள் ஓடினவா... அல்லது பணம் கொடுத்து ஓட்டப்பட்டனவா? என்ற கேள்வியை திரையுலகில் யாரும் கேட்கவில்லை. காரணம், தெரிஞ்ச கதைதானே.. இதைப் போய் என்ன கேட்டுக்கிட்டு? என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

  ஆரம்ப வசூல்..

  ஆரம்ப வசூல்..

  ஜில்லாவும் வீரம் படமும் பொங்கலுக்கு வெளியாகின. முதல் வாரம் வசூலை அள்ளின. காரணம் நீண்ட விடுமுறைக் காலம் அது.

  விடுமுறை முடிந்த பிறகு இந்தப் படங்களை வெளியிட்ட அரங்குகளில் வெகுவாகக் குறைந்திருந்தது. இரண்டு படங்களுமே பெரிதாகப் போகவில்லை என்ற முணுமுணு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கிளம்பியது.

  தயாரிப்பாளர் சங்கம் சாடல்

  தயாரிப்பாளர் சங்கம் சாடல்

  ஒருபடி மேலேபோன தயாரிப்பாளர் சங்கம், இந்த இரண்டு படங்கள் மூலம் பைசா தேறல. தயாரிப்பாளருக்கு கடும் நஷ்டம் என்று சினிமா விழா மேடைகளில் குற்றம் சாட்ட ஆரம்பித்தனர். கேயார் பகிரங்கமாகவே ஜில்லா படத்தைச் சாடினார்.

  இப்படி சினிமா உலகமே தோல்விப் படங்கள் என அறிவித்துவிட்ட ஜில்லாவும் வீரமும் இன்று நூறாவது நாள் போஸ்டர்களை அடித்து, விழாவும் எடுப்பதை என்னவென்பது?

  உண்மை நிலை

  உண்மை நிலை

  சரி, உண்மையிலேயே இந்த இரு படங்களும் எத்தனை அரங்குகளில் 100 நாட்கள் ஓடின?

  பிவிஆர் மற்றும் ஆல்பட் அரங்குகளில் ஜில்லா 100 நாட்கள் கண்டதாக சொல்கிறார்கள். ஆனால் பிவிஆரில் 50 நாளிலிருந்தே ஜில்லாவைக் காணவில்லை. பேபி ஆல்பட்டில் மட்டும் காலைக் காட்சியாக இந்தப் படம் ஓட்டப்பட்டுள்ளது. போதிய ஆட்கள் இல்லாத நாட்களில் படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டதும் உண்டு.

  வீரம்...

  வீரம்...

  வீரம் படம் நூறு நாட்கள் கண்டதாக வெளியிடப்பட்டுள்ள எஸ் 2 (சத்யம்), ஏஜிஎஸ், பாரத், பெரம்பூர் பிருந்தா என எந்தத் தியேட்டரிலும் வீரம் படம் ஓட்டப்படக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  கடைசியில் எல்லோரும் பவர் ஸ்டார்தானா?

  கடைசியில் எல்லோரும் பவர் ஸ்டார்தானா?

  லத்திகா என்றொரு படம். பவர் ஸ்டார் சீனிவாசன் ஹீரோவாக நடித்து, தன் பெயரை இயக்குநராகவும் போட்டுக் கொண்ட படம் இது. இந்தப் படம் வெளியான முதல் நாளிலிருந்தே இழுத்துப் பிடித்து பிரியாணி கொடுத்து பார்க்கச் சொன்னால் கூட பார்க்க ஆளில்லாத நிலை.

  லத்திகா நினைவிருக்கா?

  லத்திகா நினைவிருக்கா?

  ஆனால் அந்தப் படத்துக்கு நாளொரு விளம்பரம், பொழுதொரு பரிசெல்லாம் கொடுத்து, கமலாவில் தொடர்ந்து ஓட்டினார் பவர் ஸ்டார். 225 நாள் வரை தம் கட்டி ஓட்டி, ஒருவழியாக நிறுத்தினார்.

  இதற்காக அவரை கிண்டலடிக்காதவர்களே இல்லை. திரையுலக அமைப்புகள் இந்தப் போக்கைக் கண்டித்தன. இந்த மாதிரி தியேட்டர்களுக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்றெல்லாம கூறினர்.

  இதில் விஜய்தான் சீனியர்...

  இதில் விஜய்தான் சீனியர்...

  கடைசியில் முன்னணி நடிகர்களின் படங்களை பவர் ஸ்டார் வழியைப் பின்பற்றி ஓட்ட ஆரம்பித்துவிட்டார்களே... (ஆனாலும் விஜய் படம் இதில் விதிவிலக்கு. அவரது சச்சின் படம் 200 நாட்களை கமலாவில் கடந்த விதம் நினைவிருக்கலாம்!)

  பாவம் ஆபரேட்டர்...

  பாவம் ஆபரேட்டர்...

  நட்சத்திர நடிகர்களின் அந்தஸ்தைக் காக்க வேண்டி இப்படி வீம்புக்கென்று படங்களை ஓட்டுவதில் கடுமையாக பாதிக்கப்படுபவர் தியேட்டர் ஆபரேட்டர்தான். பின்னே... ஆளே இல்லாத தியேட்டரில் சுவாரஸ்யமின்றி எவ்வளவு நாள்தான் அவரும் ஓட்டுவார்.. கண்ணுமுழி பிதுங்கிடாதா!!

  English summary
  Today Jilla and Veeram producers announced 100 days success run. Are they really deserve for this?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X