»   »  ஜிமிக்கி கம்மலுக்கு எலும்புக்கூடு இந்த ஆட்டம் போடுதே..!

ஜிமிக்கி கம்மலுக்கு எலும்புக்கூடு இந்த ஆட்டம் போடுதே..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு : மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற பாடல்தான் 'ஜிமிக்கி கம்மல்'. இந்தப் பாடல் கேரள மக்கள் தாண்டி பெரும்பாலானோருக்கும் பிடித்திருந்தது.

இந்தப் படத்தைப் ப்ரொமோட் செய்வதற்காக 'ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச்' ஒன்று தொடங்கப்பட்டது. 'ஜிமிக்கி கம்மல்' சேலஞ்சின் மூலம்தான் இந்தப் பாடல் செம ஹிட் ஆனது. தமிழ், மலையாள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது 'ஜிமிக்கி கம்மல்'.

Jimikki Kammal Dance - Skeleton Version

அந்தப் பாடலுக்கு ஆடிய ஆசிரியை ஷெரிலுக்கு தமிழிலும், மலையாளத்திலும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது. ஜிமிக்கி கம்மல் சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்ட் ஆகியதால், அந்தப் பாடலின் வரிகளுக்கு பலரும் நடனமாடி வீடியோக்களைப் பதிவேற்றினர்.

எம்.ஜி.ஆர், கவுண்டமணி, செந்தில் வடிவேலு தொடங்கி விஷால் வரை இந்தப் பாடலுக்கு ஆடினால் எப்படி இருக்கும் என வீடியோக்களைப் பகிர்ந்து வந்தனர். இந்தப் பாடலின் தமிழ் வெர்சனையும் உருவாக்கி சமீபத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில், இலங்கையில் இருக்கும் ஒரு கல்லூரியின் மல்டிமீடியா மாணவர்கள் 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு எலும்புக்கூடுகளை ஆடவைத்து வீடியோ உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

English summary
Social media people were celebrated Malayalam's 'Jimikki Kammal'. Now, the skeleton version of 'jimikki kammal' song made by srilankans are becomes viral.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil