»   »  அட, நம்ம செல்ஃபி புள்ளதாங்க அந்த ஜிம்மிக்கி கம்மல்!

அட, நம்ம செல்ஃபி புள்ளதாங்க அந்த ஜிம்மிக்கி கம்மல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளங்களில் கடந்த இரு வாரங்களாக ஜிம்மிக்கி கம்மல் பாட்டும் டான்சும்தான் வைரல்.

பாட்டின் மெட்டும் பாட்டு வரிகளும் அதற்கான நடனமும் கேட்க பார்க்க நன்றாக இருந்தாலும், அந்த மெட்டை ஏற்கெனவே கேட்டிருக்கோமே என்பதுதான் பலருக்கும் யோசனை.

Jimikki Kammal is nothing but Selfie Pulla...

பார்த்தால்... அது நம்ம விஜய் நடிச்ச கத்தி படத்தில் இடம்பெறும் செல்ஃபி புள்ள... பாடல்.

கத்தி படம் 2015-ல் வெளியானது. அந்தப் படத்தில் விஜய்யும் சமந்தாவும் பாடும் இந்தப் பாட்டு செம ஹிட்டடித்தது. அனிருத் இசையமைத்திருந்தார். பாட்டின் ஸ்பெஷல், அதை விஜய் அட்டகாசமாகப் பாடி ஆடியிருந்ததுதான். யுட்யூபில் இந்தப் பாடலை இதுவரை 3 மில்லியன் பேருக்கும் மேல் பார்த்து ரசித்துள்ளனர்.

Jimikki Kammal is nothing but Selfie Pulla...

இந்த ஜிமிக்கி கம்மல் பாடல் இடம்பெற்ற படம் வெளிபடின்டே புஸ்தகம். மோகன்லால் நடித்து, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. ஷான் ரஹ்மான் என்பவர் இசையமைத்திருந்தார். இந்தப் பாட்டு வெளியான வேகத்தில் 25 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

விஜய்க்கு கேரளாவில் ஏக ரசிகர்கள் உள்ளனர். இந்த கத்தி படமும் கேரளாவில் வெளியாகி பெரிய ஹிட்டடித்தது. அந்தத் தாக்கத்தின் வெளிப்பாடாகக் கூட இந்தப் பாடல் உருவாகியிருக்கலாம்.

English summary
The recently sensational Jimikki Kammal song is having lot of resemlence of Vijay's Selfie Pulla...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil