»   »  'ஜிமிக்கி கம்மல்' ஷெரிலுக்கு அதுக்குள்ள கல்யாணம்.. வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

'ஜிமிக்கி கம்மல்' ஷெரிலுக்கு அதுக்குள்ள கல்யாணம்.. வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
'ஜிமிக்கி கம்மல்' ஷெரிலுக்கு கல்யாணமா?- வீடியோ

சென்னை : சில மாதங்களுக்கு முன்பு, இணையத்தைக் கலக்கிய 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

மோகன்லால் நடித்த மலையாளப் படத்தின் ப்ரொமோஷனுக்காக நடத்தப்பட்ட சேலஞ்சில் கலந்துகொண்டு 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஷெரில் குழுவினர் பிரபலமாகினர்.

உலகம் முழுக்க ட்ரெண்டான ஜிமிக்கி கம்மல் பாடலால் கொண்டாடப்பட்ட ஷெரில் தற்போது கேரளாவைச் சேர்ந்த மணமகனைக் கரம்பிடிக்க இருக்கிறார்.

வெளிப்பாடிண்டே புஸ்தகம்

வெளிப்பாடிண்டே புஸ்தகம்

சில மாதங்களுக்கு முன்பு, மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'ஜிமிக்கி கம்மல்'. படத்தை ப்ரொமோட் செய்வதற்காக ஜிமிக்கி கம்மல் சேலஞ்சை தொடங்கியது படக்குழு.

ஷெரில்

ஷெரில்

'ஜிமிக்கி கம்மல்' சேலஞ்சில் கேரளாவைச் சேர்ந்த பல ரசிகர்கள் கலந்துகொண்டனர். அவற்றில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆசிரியை ஷெரில் குழுவினர் ஆடிய வீடியோ செம வைரலானது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என திரும்பிய பக்கமெல்லாம் ஷெரில் ட்ரெண்ட் ஆனார்.

ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

ஷெரிலுக்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளம் உருவானது. தமிழகத்தில் அவருக்கு இருந்த ஆதரவால், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் ப்ரொமோஷனுக்கு ஷெரில் ஆடியிருந்தார்.

திருமணம்

திருமணம்

'ஜிமிக்கி கம்மல்' புகழால் பல நிகழ்ச்சிகளில் விருந்தினராகவும் கலந்துகொண்டு ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு அசத்தினார் ஷெரில். இந்நிலையில், ஷெரிலுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

புகைப்படம்

புகைப்படம்

ஷெரிலுக்கும் கேரளாவைச் சேர்ந்த ப்ரஃபுல் டோமி அமம்துருத்தில் என்பவருக்கும் சமீபத்தில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் ஆச்சரியம்

ரசிகர்கள் ஆச்சரியம்

மாப்பிள்ளை டோமி கேரளாவின் தொடுப்புழா பகுதியைச் சேர்ந்தவர். தமிழ், மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோதும் மறுத்த ஷெரில், இத்தனை விரைவாக திருமணம் செய்துகொள்வது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

English summary
A few months ago, 'Jimikki Kammal' Sheril is a viral sensation. Jimikki Kammal Sheril is to marry soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X