»   »  வாவ்... சென்னைக்கு வருகிறார் 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில்!

வாவ்... சென்னைக்கு வருகிறார் 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'ப்ரேமம்' படத்து நாயகிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு இளைஞர்கள் கொண்டாடிய லேட்டஸ்ட் மலையாள வரவு 'ஜிமிக்கி கம்மல்' பாடல்.

மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் நடனம் ஆடினார்கள்.

அந்தப் பாடலுக்கு ஆசிரியை ஷெரில் குழுவினர் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களைத் தெறிக்க விட்டது அனைவரும் அறிந்ததே.

 ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

ஷெரிலுக்கு தமிழிலும், மலையாளத்திலும் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது. ஷெரில் புண்ணியத்தில் அந்தப் பாட்டு பயங்கர ஹிட்டாகி படத்துக்கும் பப்ளிசிட்டி தேடித் தந்தது.

 சினிமாவில் நடிப்பேன்

சினிமாவில் நடிப்பேன்

'ஜிமிக்கி கம்மல்' மூலம் புகழ்பெற்ற ஷெரில் தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன் எனவும் கூறியிருந்தார். தொடர்ந்து பல பேட்டிகளில் ஷெரில், உடன் ஆடிய ஆசிரியை அன்னா இருவரையும் காணமுடிந்தது.

இசை நிகழ்ச்சி

இந்நிலையில், வரும் அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த 'மறுவார்த்தை பேசாதே' பாடலை பாடிய சித் ஸ்ரீராம் பங்கேற்கிறார்.

 சென்னை வருகிறார்

சென்னை வருகிறார்

இந்த நிகழ்ச்சியில் 'ஜிமிக்கி கம்மல்' புகழ் ஷெரில் கலந்துகொண்டு அந்தப் பாடலுக்கு நடனமாட இருக்கிறாராம். இந்தத் தகவலால், ஷெரிலின் தமிழ் ரசிகர்கள் உற்சாகமாகி வருகிறார்கள்.

English summary
After the movie 'premam', Tamilnadu youth celebrated malayalam's 'Jimmikki Kammal'. Sheril was dancing for the song and she goes viral. Sheril is going to attend a school show in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil