»   »  உருண்டு புரண்டு சிரிக்க... வடிவேலு, கவுண்டமணி, செந்திலின் 'ஜிமிக்கி கம்மல்'

உருண்டு புரண்டு சிரிக்க... வடிவேலு, கவுண்டமணி, செந்திலின் 'ஜிமிக்கி கம்மல்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'ப்ரேமம்' படத்துக்குப் பிறகு தமிழ்நாட்டு இளைஞர்கள் கொண்டாடும் மலையாள வரவு 'ஜிமிக்கி கம்மல்'.

'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களைத் தெறிக்க விட்டிருக்கிறது.

அந்தப் பாடலுக்கு ஆடிய ஆசிரியை ஷெரிலுக்கு தமிழிலும், மலையாளத்திலும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது.

'ஜிமிக்கி கம்மல்' ரீமிக்ஸ் :

'ஜிமிக்கி கம்மல்' ரீமிக்ஸ் :

'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்தப் பாடலுக்கு தமிழ் சினிமா நடிகர்களின் நடன அசைவுகளை எடிட் செய்து வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள். அப்படி விஜயகாந்த், விஷால் ஆகியோரை வைத்து உருவாக்கிய வீடியோக்கள் பலரால் பகிரப்பட்டன. இப்போது இன்னும் சில வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

வடிவேலு வெர்சன் :

பள்ளி, கல்லூரி காட்சிகள் முதல் சமகால அரசியல் பிரச்னைகள் வரை எல்லாவற்றிற்கும் வடிவேலு ரியாக்‌ஷன்கள் பொருத்தமாக இருக்கும். மீம்ஸ் உலகத்தினரை வாழவைக்கும் வடிவேலு 'ஜிமிக்கி கம்மலுக்கும்' ஆடியிருக்கிறார் பாருங்கள்... #VadiveluForLife

கவுண்டமணி செந்தில் வெர்சன் :

கவுண்டமணியும், செந்திலும் ஒருவரையொருவர் வம்பிழுத்துக் கலாய்த்துக் கொள்ளும் காட்சிகள் நிறையப் பார்த்திருக்கிறோம். 'ஜிமிக்கி கம்மல்' இருவரையும் எப்படி ஆட வைத்திருக்கிறது பாருங்கள்...

நடிகர்கள் மாஷ்-அப் :

அஜித், விஜய் தொடங்கி இன்றைய சிவகார்த்திகேயன் வரை தமிழ் சினிமா நடிகர்கள் ஆடிய குத்துப் பாடல்கள் இந்தப் பாடலுக்கு எப்படி sync ஆகியிருக்கு பாருங்க...

விஜய் சேதுபதி வெர்சன் :

விஜய் சேதுபதி 'விக்ரம் வேதா' படத்தில் சாப்பிட்ட கொத்துக்கறியும், ஆடிய டான்ஸும் சேட்டன்களின் ஜிமிக்கி கம்மலுக்கு எப்படி பொருத்தமா இருக்கு பாருங்க...

English summary
After the movie 'Premam', Tamil youths celebrate 'Jimikki Kammal' song.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil