Don't Miss!
- News
எட்டப்பன் வேலை பார்க்கிறார்கள்.. ஈரோடு இடைத்தேர்தலில் பாடம் புகட்டுவோம்.. எடப்பாடி பழனிசாமி பேச்சு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஜியோ சாவன் வெளியிட்ட.. இந்த ஆண்டின் டாப் 5 தமிழ் ஆல்பம்!
சென்னை: பாடல்களை ஆன்லைனில் விரும்பி கேட்போர் மத்தியில் ஜியோ சாவன் ஆப் மிகவும் பிரபலமான ஒன்று.
ஜியோ சாவன் சமீபத்தில் இந்த ஆண்டின் டாப் 5 பாடல்களின் லிஸ்டை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து தற்போது இந்த டாப் 5 ஆல்பம் லிஸ்டை வெளியிட்டுள்ளது.
உங்களை
எந்த
நேரத்திலும்
தவறாக
பேசவில்லை..
அனிதா
குடும்பத்திடம்
மன்னிப்பு
கேட்ட
ஆரி!
தமிழில் டாப் 5 இடங்களை பிடித்த ஆல்பம்களின் விவரம் இதோ!

4.8 மில்லியன் முறை
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் "ஓ மை கடவுளே". இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் கதைப்போமா, ஹய்யோ ஹய்யோ, மறப்பதில்லை நெஞ்சே பாடல்கள் பெரிய வரவேற்பு பெற்றது. 4.8 மில்லியன் முறை ஜியோ சாவனில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளது.

உன்ன நெனச்சு
உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் நடிப்பில் வெளிவந்த படம் "சைக்கோ". இந்த படத்தை மிஷ்கின் இயக்க இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற உன்ன நெனச்சு, நீங்க முடியுமா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மனதில் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருந்தது. 6 மில்லியன் முறை ஜியோ சாவனில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளது.

13.8 மில்லியன் முறை
துல்கர் சல்மான், ரித்து வர்மா நடிப்பில் வெளிவந்த படம் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்". இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க ஹர்ஷவர்தன் ரமேஸ்வர், மசாலா காஃபி குழு இசை அமைத்திருந்தனர். இந்த படத்தில் சிரிக்கலாம் பறக்கலாம், கனவே நீ நான் ஆகிய பாடல்கள் பெரிய வரவேற்ப்பை பெற்றது. 13.8 மில்லியன் முறை ஜியோ சாவனில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளது.

காட்டு பயலே
சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளிவந்த படம் "சூரரை போற்று". சுதா கொங்காரா இயக்க ஜீ.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் பெரும்பாலும் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றாலும் வெய்யோன் சில்லி, காட்டு பயலே பாடல்கள் கூடுதல் வரவேற்பை பெற்றது. 17 மில்லியன் முறை ஜியோ சாவனில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளது.

வாத்தி கம்மிங்
தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் "மாஸ்டர்". இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்திலும் பெரும்பாலும் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றாலும் வாத்தி கம்மிங்,வாத்தி ரெய்டு ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் தொடர்ந்து ஒலித்து கொண்டு இருக்கிறது. 24.8 மில்லியன் முறை ஜியோ சாவனில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளது.