ஜித்தன்னா சும்மாவா.. இப்போ தான் தல ஆட ஆரம்பிச்சிருக்கு.. நிஷா, ரியோ, ஆரிக்கு செம பல்பு!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 65ம் நாள் வெளியான 3வது புரமோவில், நிஷாவுக்கும் ஆரிக்கும் சண்டை நடப்பது போல காட்டும் போதே, அது செட்டிங் தான் என தெரிந்து விட்டது.
ரோபாவாக இருக்கும் ஜித்தன் ரமேஷை டார்கெட் பண்ண ரியோ போட்ட பிளான் படி நிஷாவும் ஆரியும் அப்படி நடித்தும் ஜித்தன் ரமேஷை ஏமாற்ற முடியவில்லை.
நீங்க எல்லாம் என்னை கோபப்பட வைக்க டிராமா பண்றீங்கன்னு தெரியுதுன்னு ரோபோ ஸ்டைலில் பேசி அடி வெளுத்து விட்டார்.

ரியோவின் ஸ்கெட்ச்
அர்ச்சனா அக்காவின் அப்பா பற்றி இழுத்து பெரிய தவறு செய்துவிட்டேன் என அழுது கொண்டிருந்த நிஷாவை, இதே கோபத்தோடு போய் ஆரி பிரதரை கண்டபடி திட்டி விளாசு, அப்போ தான் ஜித்தன் ரமேஷ் அண்ணன் டென்ஷன் ஆவார். நிச்சயம் அவரது உணர்ச்சியை வெளிக் கொண்டு வர ட்ரை பண்ணு என ரியோ பக்காவா ஸ்கெட்ச் போட்டு நிஷாவை அனுப்பி வைத்தார்.

ஆரியின் முயற்சி
ரோபாவாக இருக்கும் ஜித்தன் ரமேஷை எப்படியாவது கோபப்படுத்தி விட நினைத்து ஆரி ரொம்பவே மெனக்கெட்டு வந்தார். ஏற்கனவே ரமேஷ் சிரித்து விட்ட நிலையில், அவரது ஒரு ஹார்ட்டை பிடுங்கி விட்டனர். ஆனால், அடுத்த உணர்ச்சியான கோபத்தை வர வைக்க ஆரியால் முடியவில்லை.

நல்லாவே நடித்த நிஷா
ரியோவின் திட்டப்படியே, ஆரி அருகே வந்த நிஷா அவரை இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடி வெளுத்து வாங்கினார். புரமோவில் அதை பார்த்த ரசிகர்கள், நிஷாவை இந்த வாரமே பேக் பண்ணி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிற அளவுக்கு கொதித்தெழுந்தனர். ஆனால், இதெல்லாம் நிஷாவின் நல்ல நடிப்பு என்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் ஆரியை போலவே நிஷாவையும் ஆரத்தழுவி பாராட்டி வருகின்றனர்.

ஆட ஆரம்பித்த தல
ஜித்தன் ரமேஷ் வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்றாரு, டாஸ்க்கை ஒழுங்கா செய்யல என ஏகப்பட்ட புகார்களை ஆரி அவர் முன்னதாகவே அப்படி அடுக்கியும், ஆரியும் நிஷாவும் அப்படி சண்டை போட்டுக் கொண்ட போதும், தனியாக அழைத்து சென்ற ரியோவிடம், நிஷாவும் ஆரியும் நல்லா டிராமா பண்ணி என்ன கோபப்படுத்த பார்க்கிறாங்கன்னு சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தி விட்டார். தல நீ ஆடு தல!

மூவருக்கும் பல்பு
ஜித்தன் ரமேஷை எப்படியாவது ஈஸியா அவுட் ஆக்கிவிடலாம் என நினைத்த ரியோ, ஆரி மற்றும் நிஷாவுக்கு செம பல்பு கொடுத்தார் ஜித்தன் ரமேஷ். என்னதான் கிண்டலாகவும், கேலியாகவும் போட்டியாளர்கள் பேசினாலும், எதற்கும் அசராமல் டாஸ்க்கை செய்து கெத்துக் காட்டியுள்ளார். எவிக்ஷனில் இருந்து எஸ்கேப் ஆகிடுவாரோ?


Click it and Unblock the Notifications











